For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா!

06:15 PM Feb 03, 2024 IST | admin
பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா
Advertisement

ஞ்சாப் மாநில கவர்னர் பன்வாரிலால் புரோகித் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இதுகுறித்து, ஜனாதிபடி திரவுபதி முர்முவுக்கு அவர் ராஜினாமா கடிதம் எழுதியுள்ளார். பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசுடன் தொடர் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் பன்வாரிலால் புரோகித். தனிப்பட்ட காரணங்களுக்காக ஆளுநர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். பஞ்சாப் கவர்னராக நியமிக்கப்படுவதற்கு முன்பு தமிழ்நாட்டின் கவர்னராக செயல்பட்டவர் பன்வாரிலால் புரோகித். அவரின் பதவிகாலத்தில் சில சர்ச்சைகளும் வெடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

ஆம் ஆத்மி ஆட்சி செய்யும் பஞ்சாப் மாநில அரசுக்கும், கவர்னர் புரோகித்துக்கும் இடையே தொடக்கம் முதலே கடும் மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த நிலையில் பஞ்சாப் மாநில அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தாமதப்படுத்துவதற்கு எதிராக அம்மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டிதில் வழக்கு தொடர்ந்தது.

Advertisement

பஞ்சாப் மாநில அரசு தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நவம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது, "இந்த விவகாரம் இக்கோர்ட்டுக்கு வருவதற்கு முன்பே கவர்னர் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இது போல் சுப்ரீம் கோர்ட்டுக்கு வழக்குகள் வரும்போது மட்டுமே கவர்னர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும். கவர்னர்கள் தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை என்பதை மறந்துவிடக் கூடாது. அகையால், கவர்னர்கள் கொஞ்சம் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்" என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இதன்பின்னரும் கூட பஞ்சாப் கவர்னர், முதல்வர் இடையிலான மோதல் போக்கு ஓயவில்லை. இந்த சூழலில் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் பன்வாரிலால் புரோகித்.

Tags :
Advertisement