தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பஞ்சாப்:சுக்பீர் சிங் பாதலை சுட்டுக்கொல்ல முயற்சி!

12:30 PM Dec 04, 2024 IST | admin
Advertisement

ஞ்சாபில் கடந்த 2007 முதல் 2012 வரை சிரோமணி அகாலி தள் ஆட்சியில் இருந்தது. அப்போது பிரகாஷ் சிங் பாதல் முதல்வராகவும், அவரது மகனான சுக்பிர் சிங் பாதல் துணை முதல்வராகவும் இருந்தனர். 2007ல் சீக்கிய மதத்தை அவமதித்துப் பேசிய தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு மத நிந்தனை வழக்கில் மன்னிப்பு வழங்கப்பட்டது, அவர் தண்டிக்கப்படாதது உள்ளிட்ட குற்றங்கள் அப்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டு, அது குறித்து சீக்கிய மதத்தின் உயர் அதிகார அமைப்பான அகால் தக்த் விசாரணை நடத்தியது. இதில், பிரகாஷ் சிங் பாதல், சுக்பிர் சிங் பாதல், அப்போது அமைச்சர்களாக இருந்தவர்கள், சிரோமணி அகாலி தள் கட்சியின் உயர் பொறுப்பில் இருந்தவர்கள் ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கான தண்டனையும் அறிவிக்கப்பட்டது.

Advertisement

அதில், அக்கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் சேவகராக தூய்மை பணிகளில் ஈடுபட வேண்டும் என்று உத்தரவிட்டார். பஞ்சாப்பில் 5 முறை முதல்வராக பதவி வகித்த மறைந்த பிரகாஷ் சிங் பாதலுக்கு வழங்கப்பட்ட ‘ஃபக்ரே-ஏ-கெளம்’ என்ற பட்டத்தைத் திரும்ப பெறப்படுவதாக கியானி ரக்பீர் சிங் தெரிவித்தார். இந்த தண்டனையை ஏற்ற சுக்பீர் சிங் பாதல், அக்கட்சியின் தலைவர் பதவியை நேற்று (03.12.2024) ராஜினாமா செய்தார். அதோடு சக்கர நாற்காலியில் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு வந்தார். இதனையடுத்து, அவர் பொற்கோயிலில் உள்ள பாத்திரங்கள், காலணிகள், குளியலறைகள், கழிவறைகள் போன்றவற்றைச் சுத்தம் செய்து தூய்மை பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

Advertisement

பாதலின் கால் துண்டிக்கப்பட்டதால் அவருக்கு விலக்கு அளித்து கோயில் வாயில் காப்பாளராக பணியாற்ற உத்தரவிடப்பட்டது.தண்டனையை நிறைவேற்ற பொற்கோயில் வாயிலில் இன்று காலை சக்கர நாற்காலியில் ஈட்டியை பிடித்துக் கொண்டு காவல் காத்தார் சுக்பீர் சிங் பாதல்.அப்போது அங்கு வந்த மர்ம நபர் சுக்பீர் சிங் பாதலை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினார். நல்வாய்ப்பாக இந்த தாக்குதலில் சுக்பிர் சிங் காயம் அடையவில்லை. நூலிழையில் அவர் உயிர் தப்பிய நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுற்றிவளைத்து சுக்பீர் சிங் ஆதரவாளர்கள் பிடித்தனர். துப்பாக்கியால் சுட்ட நபர் பஞ்சாப் காவல்துறையால் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவரது பெயர் நாராயணன் சிங் என்பது தெரியவந்துள்ளது.

Tags :
Attempt to killgolden templepunjabSukhbir Singh Badal
Advertisement
Next Article