புதுயுகம் தொலைக்காட்சியில் புதிய நிகழ்ச்சி ‘I am a Traveller’.!
சுற்றுலாச் செல்வது ஒரு கலை. கிணற்று தவளையாக ஓரிடத்தில் வாழ்வது எப்போது இன்பம் தராது. பல புதிய இடங்களுக்குச் செல்வதும், பல்வேறு மக்களை காண்பதும் நம் உணர்வை மட்டுமில்லாது உடலுக்கும் புத்துணர்ச்சி தரும். புதிய புதிய அனுபவங்களை பெற்றிடுவது தான் மனித பிறப்பின் மகத்துவம். அறிவியல் வளர்ச்சி காரணமாக இன்றைய உலகம் மிகவும் சுருங்கி விட்டது. இது பல இடங்களில் பலம் தான் என்றாலும், அனுபவத்தின் மூலம் பாடம் படிக்கும் மனிதனின் கற்றலுக்கு ஒரு தடை கல்லாக அமைந்துவிட்டது.இயற்கையில் படைப்பில் இருக்கும் அழகுகள், உயிரினங்கள் ஆகியவை கண்ணையும் கருத்தையும் கவரும் தன்மையிலானவை. பாய்ந்து செல்லும் ஆறுகள், பரந்து விரிந்த கடல்கள், மலைக்காட்சிகள், மண்ணின் வளங்கள், குகைகள் போன்றவை என்றும் நம்மை ஆச்சர்யப்படுத்துபவை.
நாகரிகமும் பண்பாடும் நாட்டுக்கு நாடு, இனத்திற்கு இனம், மொழிக்கு மொழி மாறுபடுகிறது. வேற்றுமைகளில் ஒற்றுமை காண்பதே மனிதப் பண்பு. கலவையில் தானே புதுமை இருக்கிறது. மாறும் இந்த உலகில் சுற்றுலாவின் மூலமே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளும் வாய்ப்புண்டாகும்.அதை கவனத்தில் கொண்டு புதிய இடங்களை தேடி தேடி பயணித்து அதனை மக்களுக்கு வழங்கும் நோக்கத்துடன் ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சென்னையின் பிரபலமான இடங்களும், சென்னையில் இதுவரை பலர் பார்க்காத இடங்களும் படப்பதிவு செய்யப்படுவது இதன் தனிச்சிறப்பு.
இந்த நிகழ்ச்சி சென்னை மட்டுமல்லாமல் தமிழக முழுவதும் உள்ள வித்தியாசமான ,புதுமையான சுற்றுலா தலங்களை தேடி கண்டுபிடித்து, அந்த இடத்தின் தனித்தன்மை குறித்தும் பிரத்தியேகமாக எடுத்து கூறி அவற்றை மக்களுக்கு வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை தொகுப்பாளர் பிருந்தா தொகுத்து வழங்குகிறார்.