புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணிவாய்ப்பு!
06:30 PM Aug 19, 2024 IST | admin
Advertisement
இந்தியா முழுவதும் 168 ஜூனியர் இளநிலை பொறியாளர், மேற்பார்வையாளர் ஆகிய பணியிடங்களை பணியமர்த்த புதுச்சேரி பொதுப்பணித்துறை முடிவு செய்து தற்போது அதற்கான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பணியில் வேலைக்கு சேர என்னென்ன தகுதிகள் வேண்டும் எவ்வளவு சம்பளம் வழங்கப்படும் என்கிற அனைத்து விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
காலியிடங்கள் விவரம்
பதவியின் பெயர் | எண்ணிக்கை |
இளநிலை பொறியாளர் Advertisement (Junior Engineer Civil) | 99 |
மேற்பார்வையாளர் (Overseer) | 69 |
கல்வி தகுதி
- இளநிலை பொறியாளர் : பணியில் விண்ணப்பம் செய்ய விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் BE/B.Tech முடித்திருக்கவேண்டும்.
- மேற்பார்வையாளர் : பணியில் விண்ணப்பம் செய்ய விண்ணப்பதாரர்கள் டிப்ளமோ முடித்திருக்கவேண்டும்.
வயது வரம்பு
- இளநிலை பொறியாளர், மேற்பார்வையாளர்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது 30-ஆக இருக்கவேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பளம் எவ்வளவு?
- சம்பள விவரத்தை பொறுத்தவரையில், தொடக்கத்தில் ரூ. 20,000 வழங்கப்படும், அதன்பிறகு
விதிமுறைகளின் படி உயர்த்தப்பட்டு வழங்கப்படும்.
விண்ணப்ப விவரம்
- மேற்கண்ட பணிகளில் வேலைக்கு சேர விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வாயிலாக மட்டும் தான் விண்ணப்பம் செய்துகொள்ளமுடியும்.
- இந்த வேலையில் சேர விண்ணப்பிக்க எந்த விண்ணப்பக் கட்டணமும் வசூலலிக்கப்படாது எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பம் செய்யும் முறை?
- இந்த பணிகளில் வேலைக்கு சேர விருப்பமும், தேவையான தகுதியும் உங்களுக்கு இருந்தது என்றால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://recruitment.py.gov.in/ இணையதளத்திற்கு செல்லவேண்டும்.
- பின் அதில் இந்த வேலை சம்பந்தமாக கொடுக்கப்பட்டுள்ள விளம்பரத்தை க்ளிக் செய்யவேண்டும்.
- செய்து முடித்த பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை தேவையான ஆவணங்களை வைத்து நிரப்பி கொள்ளுங்கள்
- நிரப்பிய பிறகு நீங்கள் நிரப்பியது சரியாக இருக்கிறதா? என்பதை பார்த்துவிட்டு சமர்ப்பி என்பதை க்ளிக் செய்தால் போதும்.
தேர்வு செய்யப்படும் முறை?
- இந்த வேலையில் சேர விண்ணப்பம் செய்த விண்ணப்பதாரர்களில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேரில் அழைக்கப்பட்டு தேர்வு செயல்முறை எழுத்துத் தேர்வு/நேர்காணல் மூலம் நடத்தப்பட்டு வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முக்கிய நாட்கள்
விண்ணப்பம் தொடங்கிய தேதி | 17-08-2024 |
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி | 31-08-2024 |
முக்கிய விவரம்
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | க்ளிக் |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | க்ளிக் |