தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

புது யுகம் தொலைக்காட்சியில் “நலம் தரும் நவராத்திரி “!

09:21 AM Sep 29, 2024 IST | admin
Advertisement

னிதர்களின் அனைத்து செயல்பாடுகளுக்கும் காரணமாக இருப்பது பிரபஞ்ச சக்தி. இந்த பிரபஞ்ச சக்திகளுக்கெல்லாம் சக்தியளிப்பவள் பராசக்தி. அந்த பராசக்திக்கு உருவம் கிடையாது. ஆனால் உணரமுடியும். அந்த சக்தியைப் பரிபூரணமாக உணர, உருவமாக அமைத்து வழிபடும்போது அதற்கு சில விசேஷ சக்திகள் கிடைக்கின்றன.நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்றுதான் அர்த்தம். உலகம் அனைத்தும் சக்திமயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம். உலக நன்மைக்காகத் தீமை களை அழித்து நன்மையை வழங்கும் வகையில் பராசக்தி - மகேஸ்வரி, கௌமாரி, வாராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி என பலவகை ரூபங்கள் எடுத்தாலும் அடிப்படை சக்தி ஒன்றே. இந்த தெய்வங்கள் அனைத்தையும் வீட்டிற்கு வரவழைத்து, வணங்கி வழிபடும் விழாவே நவராத்திரி. இவ் வலிமையான நவராத்திரி வழிபாடு செய்பவர்கள் துன்பங்களிலிருந்து விடுபட்டு சகல நன்மைகளையும் பெறுவார்கள்.

Advertisement

இந்தியாவில் உணவு, உடை, மொழி, இனம் என பல வேறுபாடுகள் இருந்தாலும், ஆன்மிகரீதியாக சக்தி வழிபாட்டில் - அதுவும் நவராத்திரி வழிபாட்டில் ஒருமைப்பாடே நிலவுகிறது. நவராத்திரி நாட்களில் சக்தியை வழிபட்டால் நினைத்தது நடக்கும்; எதிலும் வெற்றிபெற முடியுமென்பது இந்துக்களின் நம்பிக்கை.நவராத்திரி என்பது பத்தாம் நாளில் நல்லவர்களின் வெற்றியின் விளைவாக தீமைக்கு எதிரான நல்லவர்களின் ஒன்பது இரவுகளின் அடையாளக் கொண்டாட்டமாகும். இந்த காலகட்டத்தில், துர்க்கை சக்தி, ஆற்றல் மற்றும் ஞானத்தின் தெய்வமாக வணங்கப்படுகிறார்.நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துக்கத்தைப் போக்கும் துர்க்கையையும், இரண்டாவது மூன்று நாட்கள் செல்வத்தைப் பொழியும் லட்சுமியையும், மூன்றாவது மூன்று நாட்கள் ஞானத்தை நல்கும் சரஸ்வதியையும் வழிபடுவது வழக்கம். இந்த மூன்று சக்திகளின் வழிபாட்டுக்குரிய காலமே நவராத்திரி.

Advertisement

இந்நிலையில் ஆழமான, அலசலான மற்றும் அசத்தலான நிகழ்ச்சிகளை மட்டும், வழங்கி வரும்ம் புது யுகம் தொலைகாட்சியில் ‘நலம் தரும் நவராத்திரி’ தினங்களில் 10 நாட்களும் தேவியர்களின் புராண கதைகளை நடன வடிவில் கல்பவிருக்‌ஷா நாட்டிய குழுவினர் வழங்குகின்றனர். நட்சத்திரங்களின் வீட்டு கொலு, புதுயுகம் நேயர்களின் வீட்டு கொலு, பிரசித்தி பெற்ற கோவில்களில் வைக்கப்படும் கொலு, பள்ளியில் வைக்கப்படும் கொலுக்களின் தொகுப்புகள் இந்த நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது

இந்த நலம் தரும் நவராத்திரி நிகழ்ச்சி 03-10-2024 முதல் 13-10-2024 வரை காலை 11.30 மணிக்கும் மறு ஒளிபரப்பு மாலை 05.30 மணிக்கும் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

Tags :
hindu festivalIndian cultural sphereNalam tharum navarathiriNavaratriprogramPudhuyugam Tvநலம் தரும் நவராத்திரிநவராத்திரிபுது யுகம்
Advertisement
Next Article