தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

புதுயுகம் தொலைக்காட்சியின்” நலம் தரும் நவராத்திரி”

09:36 AM Oct 15, 2023 IST | admin
Advertisement

ந்து சமயத்தை பின்பற்றுகின்ற மக்களால் வெகு விமர்சையாக அனுஸ்டிக்கப்படும் விரதங்களில் ஒன்றாக நவராத்திரி காணப்படுகிறது. நவராத்திரி என்பது “நவ இராத்திரி” என்பன சேர்ந்தே உருவானது. ஒன்பது இரவுகள் என பொருள் கொள்ளப்படுகிறது. சக்திக்காக அனுஸ்டிக்கப்படும் ஒன்பது இரவுகள் என்பது இதன் பொருளாகும். உலகமெங்கும் இந்துக்கள் இதனை பண்டிகையினை போல மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்

Advertisement

அதாவது பக்தி என்பது இரண்டு விதம். மர்க்கடக பக்தி, மார்ஜால பக்தி. மர்கடக பக்தி என்பது குரங்கு போல, குரங்கு குட்டி பிறந்ததும் உடனே தன் தாயை பிரிய மறுத்து அதன் மடியையே பிடித்துக்கொண்டு எங்கும் திரியும். அதுபோல நாமும் அம்மனை விடாமல் பிடித்துக் கொள்வது மர்கடக பக்தி. மார்ஜால பக்தியோ பூனையை போல, பூனை குட்டி பிறந்தவுடன் அதனுடைய தாய் அந்த குட்டியையே சுற்றி சுற்றி வரும். அனைத்தையும் விட தன் குட்டியை காப்பதையே தன் தலையாய கடமையாய் கொள்ளும் பூனை.

Advertisement

ஒன்று நாம் குரங்கை போல் அம்மனை பிடித்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அம்மன் நம்மை பிடித்து பாதுகாக்கும்படி செய்ய வேண்டும். நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் சக்தியாய் வீற்றிருப்பவள் அவளே. லலிதா சகஸ்ரநாமத்தின் முதல் வரியில் ஸ்ரீமாதாவாக பூஜிக்கும் அவளை மனதார உணர வேண்டும். இதை செய்வதற்கு அம்மனிடம் நீங்காத பக்தி இருத்தல் அவசியம். அவளிடம் சரணாகதி அடைந்தால் அவள் என்றும் நமக்கு அருள் புரிந்து காப்பாள். இவ்வாறு பக்தி வளர்த்து அம்பாளிடம் சரணடைய நவராத்திரி போன்ற பண்டிகைகள் நமக்கு உதவுகின்றன. இந்த பண்டிகை காலங்களில் நாம் சுற்றத்தோடும் உறவினர்களோடும் நண்பர்களோடும் பேசி மகிழ ஒரு வாய்ப்பும் கிடைக்கிறது. நாம் மற்றவர்களுக்கு தானம் அளித்து புண்ணியத்தை பெறுவதற்கு நவராத்திரி நாள்கள் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது.

அப்படி பெண்கள் போற்றும் புண்ணிய மாதம், நவராத்திரியின் 9 நாட்களும் கொலுவின் வடிவில் நலன்களை தரும் முப்பெரும் தேவியர்... வழிபட வேண்டிய முறைகள், ஸ்ரீ விஜயராகவா இசைப்பள்ளி செங்கல்பட்டு மாணவர்களின் வாய்ப்பாட்டு பாடல்கள், சரண்யாஸ் நிருத்ய வித்யாலயா பள்ளி மாணவர்களின் நடனம், வீடுகளில் வைக்கப்பட்டிருக்கும் அழகான கொலு, பிரபலங்களின் வீடுகளில் வைக்கப்பட்டு இருக்கும் கொலு, கோவில்களில் வைக்கப்பட்டிருக்கும் கொலு என புதுயுகம் நேயர்களோடு கொண்டாடும் நலம் தரும் நவராத்திரி அக்டோபர் 15 முதல் மாலை 5:00 மணிக்கும் அதன் மறு ஒளிபரப்பு காலை 11.30 மணிக்கும் அக்டோபர் 24 விஜயதசமி வரை புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .

Tags :
festivalHinduNalam tharumnavarathiriPudhuyugamPudhuyugam Tv
Advertisement
Next Article