For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சென்னை காவல்துறை சார்பில் பொதுவெளியில் இசை நிகழ்ச்சி!

06:41 PM Nov 26, 2023 IST | admin
சென்னை காவல்துறை சார்பில் பொதுவெளியில் இசை நிகழ்ச்சி
Advertisement

சென்னை மற்றும் அனைத்து மாவட்டங்களில் வழக்கமாக, காவல்துறை அணிவகுப்பு, உயர் அதிகாரிகள் ஓய்வு பெறும் விழாக்களில் மட்டுமே காவல்துறை இசைக்குழு பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக காவல் இசை குழு என்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை பேண்ட் வாத்திய இசைக்குழுவினர், தேசிய அளவில் ஆண்டுதோறும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெறுவது வழக்கம்.

Advertisement

இதனிடையே சென்னை மெரினா கடற்கரையில் தினமும் தங்களது பொழுதை போக்குவதற்காக மக்கள் கூடுவது வழக்கம். பொதுமக்களுக்கு மட்டுமல்லாது மாற்றுத்திறனாளிகளை கடற்கரையை ரசிக்கும் வண்ணம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அங்கு வரும் மக்களின் பாதுகாப்புக்காக மெரினா கடற்கரையில் காவல்துறை தரப்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் , தற்போது மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில், சென்னை காவல்துறையின் இசைக்குழுவினர் இனி வாரம்தோறும் சனிக்கிழமையன்று இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர். இந்த நிகழ்ச்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  நேற்று தொடக்கி வைத்தார்.

Advertisement

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில், சென்னை காவல்துறையின் இசைக்குழுவினர் இனி வாரம்தோறும் சனிக்கிழமையன்று இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர். அதற்கான நிகழ்ச்சியை இன்று (அதாவது நேற்று) தொடங்கி வைத்தோம். நேர்த்தியான இசையை வழங்கியதைக் கேட்டு ரசித்தோம். இந்தியாவிலேயே முதல்முறையாக காவல்துறை சார்பில் பொதுவெளியில் இசை நிகழ்ச்சி நடத்தும் சென்னை பெருநகர காவல்துறையின் இந்த முயற்சிக்கு என் வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் பேசுகையில், ‘‘காவல் துறையின் இசைக்குழு இசையினை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் வாரம்தோறும் சனிக்கிழமை மெரினா கடற்கரையில் இசை நிகழ்ச்சி நடைபெறும். எந்த ஒரு மாநிலத்திலும் காவல் துறை இதுபோன்ற நிகழ்வுகளை முன்னெடுத்ததில்லை. ஆனால் தமிழ்நாடு காவல் துறை சார்பில் இந்த நிகழ்வு தற்போது சென்னை காவல் துறை சார்பில் முன்னெடுத்து நடைபெறவுள்ளது. காவல் துறையிடம் கோரிக்கை வைக்கும் வண்ணம் பொருட்டு தனியார் நிகழ்வுகளிலும் காவல் துறையின் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளது,’’ என்றார்.

Tags :
Advertisement