தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

2 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலியல் வழக்குகளைத் தீர்ப்பதில் சிக்கல்!?

09:21 AM Sep 11, 2024 IST | admin
Advertisement

ப்போதெல்லாம் எல்லா நாடுகளிலும் தற்சமயம் பாலியல் குற்றங்கள் அதிகமாகி வருகின்றன. ஆனால் பாலியல் குற்றங்களை கணக்கிடுவதில் சில சிக்கல்கள் உள்ளன. பாலியல் மற்றும் கற்பழிப்பு குற்றங்களின் கணக்கீடானது ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரம், மற்றும் மக்களின் மனநிலையை பொறுத்து மாறுப்படுகிறது.சில நாடுகளில் கற்பழிக்கப்பட்ட அல்லது பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள் இழிவானவர்களாக பார்க்கப்படுவார்கள், குடும்பத்தால் நிராகரிக்கப்படுகிறார்கள் எனவே அந்த அச்சம் காரணமாகவே அதிகமான பாலியல் குற்றங்கள் பதிவு செய்யப்படுவதில்லை.சில நாடுகளில் திருமணமான பெண்களுக்கு அவர்களின் கணவர்களால் நடத்தப்படும் பாலியல் தொந்தரவுகள் மற்றும் கற்பழிப்புகள் கவனிக்கப்படுவதில்லை.

Advertisement

இந்நிலையில் இந்தியாவில் பாலியல் வன்கொடுமை வழக்குகள், போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளை விரைவாக விசாரித்து முடித்து வைக்க, விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி நாடு முழுவதும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியது. அதன்படி 2019-ம்ஆண்டு அக்டோபர் மாதம் முதல் விரைவு நீதிமன்றங்கள் செயல்பாட்டுக்கு வந்தன. அதை அடுத்து இத்தகைய விரைவு நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை, தீர்வு காணப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை போன்ற விவரங்களை ‘இந்திய குழந்தைகள் பாதுகாப்பு’ என்ற தன்னார்வ தொண்டுநிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

Advertisement

அதில் இந்திய குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் குழந்தைகள் உரிமை ஆர்வலர் புவன் ரிப்பு கூறியிருப்பதாவது:

சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டாலும், மொத்தமுள்ள 4 லட்சத்து 16,638 வழக்குகளில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு இறுதி வரையில், 52% (2 லட்சத்து 14,463 வழக்குகள்) மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளன. இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், தற்போது செயல்படும் விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் தினமும் 554 வழக்குகளை முடித்து வைக்க வேண்டிய அவசியம் உள்ளது. விரைவு நீதிமன்றங்கள் திட்டத்தின் கீழ் மொத்தம் 1,023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். ஆனால், கடந்த ஆக.2024-ம் ஆண்டு நிலவரப்படி 410போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் உட்பட மொத்தம் 755 விரைவு நீதிமன்றங்கள் மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளன.

இவற்றில் ஆண்டுக்கு 76,319 வழக்குகள் முடித்து வைக்கப்படுகின்றன. அதன்படி பார்த்தால், புதிதாக எந்த வழக்கும் வராமல் இருந்தால், தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்த்து வைக்க இன்னும் 3 ஆண்டுகள் ஆகும். அதேநேரத்தில் புதிய வழக்குகள் சேர்ந்தால் இன்னும் சுமையாகும். இதற்கிடையில், விரைவு நீதிமன்றங்களில் கடந்த 2020-ம் ஆண்டு ஒரு லட்சத்து 95,991 பாலியல் வழக்குள் பதியப்பட்ட நிலையில், கடந்த 2023-ம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 2 லட்சத்து 78,4894 ஆக அதிகரித்துவிட்டது. இதனால் நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்த்து வைப்பதில் சிக்கல் தொடர்கிறது. எனினும், கடந்த 2020-ம் ஆண்டு விரைவு நீதிமன்றங்களில் 37,148 வழக்குகள் மட்டும் முடிக்கப்பட்ட நிலையில், 2023-ம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 76,319 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.எனவே, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க கூடுதலாக 1,000 விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். புதிய வழக்குகள் பதிவு செய்யப்படுவதை தடுக்க, பாலியல் குற்றங்களை தடுக்க வேண்டும்'' என்று இந்திய குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் குழந்தைகள் உரிமை ஆர்வலர் புவன் ரிப்பு தெரிவித்துள்ளார்.

Tags :
courtFastTrackingJusticeJusticeposcosexual harassment casetrail
Advertisement
Next Article