தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023-:க்கான பரிசுத் தொகை அறிவிப்பு… தோற்கும் அணிக்கும் பல கோடி..!

08:28 PM Nov 14, 2023 IST | admin
Advertisement

லகக் கோப்பை 2023 அதன் இறுதிக் கட்டத்தில் உள்ளது. 45-போட்டிகள் கொண்ட லீக் ஸ்டேஜ் முடிந்துவிட்டது. இது நாக் அவுட்களுக்கான நேரம் இது. இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் ஒரு தோல்விகூட பெறாத அணி என்றால் அது இந்திய அணி தான். புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்த அணி இந்தியா, நான்காவது இடத்தைப் பிடித்த நியூசிலாந்து அணியுடன் முதலாவது அரையிறுதிப் போட்டியிலும், இரண்டாவது இடத்தைப் பிடித்த தென்னாப்பிரிக்கா அணி மூன்றாவது இடத்தைப் பிடித்த ஆஸ்திரேலிய அணியையும் எதிர்கொள்கிறது.. அதாவது இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், உலகக்கோப்பைக்கான பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி போட்டிக்காக ஒட்டுமொத்தமாக 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணி 4 மில்லியன் அமெரிக்க டாலர்களும், தோல்வியடையும் அணி 2 மில்லியன் அமெரிக்க டாலர்களும் பரிசு தொகையாக வழங்கப்படும்.

Advertisement

உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு 4 மில்லியன் டாலர்கள் என்றால் இந்திய மதிப்பில் சுமார் ரூ.83 கோடி இருக்கும். தோல்வியடையும் அணிக்கு வழங்கப்படும் 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றால் இந்திய மதிப்பில் சுமார் 33 கோடி ரூபாய் இருக்கும். அரையிறுதியில் தோற்கும் இரு அணிகளுக்கும் தலா 8 லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பில் 6 கோடி) வழங்கப்படும்.

Advertisement

அரையிறுதிக்கு சென்ற 4 அணிகளுக்கு தலா 1 லட்சம் டாலர்கள் (83 லட்சம்) வழங்கப்படும். லீக் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு 40 ஆயிரம் டாலர்கள் (33 லட்சம்) வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்தியா தற்போது அரையிறுதியை எட்டியுள்ளது. லீக்கில் 9 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

இதன்படி, லீக் போட்டியில் வெற்றி பெறும் ஒவ்வொரு போட்டிக்கும் 40 ஆயிரம் டாலர்கள் அதாவது (33 லட்சம்) கிடைக்கும். அதேபோல அரையிறுதிக்கு சென்றதால் அதற்காக 83 லட்சம் பரிசாக வழங்கப்படும். இதை வைத்து பார்க்கும்போது இந்திய அணிக்கு தற்போது வரை 3 கோடியே 79 லட்சம் பரிசு தொகையை தங்களின் கையில் வைத்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க இந்திய அணி நடப்பு உலகக்கோப்பையில் வெற்றி பெற்று கோப்பையை மூன்றாவது முறையாக கைப்பற்ற வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் கனவாக உள்ளது. இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி ரசிகர்களின் கனவை நிஜமாக்குமா..? இந்திய அணி பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags :
announcedcroresfor the losing team.ICC World Cup 2023moneyPrize
Advertisement
Next Article