For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

நிலபேர வழக்கு ஒன்றின் குற்றப்பத்திரிக்கையில் பிரியங்கா காந்தி பெயர் - அமலாக்கத்துறை அதிரடி!

06:39 PM Dec 28, 2023 IST | admin
நிலபேர வழக்கு ஒன்றின் குற்றப்பத்திரிக்கையில் பிரியங்கா காந்தி பெயர்   அமலாக்கத்துறை அதிரடி
Advertisement

த்திரபிரதேச காங்கிரஸ் பொறுப்பிலிருந்து பிரியங்கா காந்தி விடுவிக்கப்பட்ட போதும், பிரதமர் மோடி போட்டியிடும் வாராணசி தொகுதியில் அவரை எதிர்த்து களமிறங்குவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறார். இந்த சூழலில் நிலபேர வழக்கு ஒன்றின் குற்றப்பத்திரிக்கையில் பிரியங்கா காந்தியின் பெயரை அமலாக்கத்துறை சேர்த்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது

Advertisement

தொழில் அதிபர் சஞ்சய் பண்டாரிக்கு எதிரான வருமான வரி ஏய்ப்பு போன்று பல குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறை, சிபிஐ விசாரித்து வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பி ஓடிய அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த அந்நாட்டு அரசு கடந்த ஜனவரியில் ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில், ஹரியானாவில் நில மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பிரியங்கா காந்திவுடன் அவரது கணவர் ராபர்ட் வத்ராவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் , தொழிலதிபர் சஞ்சய் பண்டாரியின் கூட்டாளியாகக் கூறப்படும் சிசி தம்பி, 2005 முதல் 2008 வரை ஹரியானாவில் உள்ள அமிபூர் கிராமத்தில் 486 ஏக்கர் நிலத்தை டெல்லி ரியல் எஸ்டேட் முகவரான எச்எல் பஹ்வா மூலம் வாங்கினார்.

Advertisement

அதே நேரத்தில் ராபர்ட் வத்ராவும் 2005-2006ல் எச்.எல் பஹ்வாவிடமிருந்து அமிபூரில் 4 ஏக்கர் அளவுள்ள நிலத்தை வாங்கி, அதே நிலத்தை 2010 டிசம்பரில் எச்.எல் பஹ்வாவுக்கு விற்றுள்ளனர். நிலம் வாங்கியதில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தொடர்புடைய பின்னணியில் உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ராபர்ட் வதேரா மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்று அமலாக்கத்துறை குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாகவும் பல வழக்குகளில் ராபர்ட் வதேரா, அமலாக்கத்துறையின் விசாரணைகளுக்கு ஆளாகியிருக்கிறார். ஆனால் குறிப்பிட்ட இந்த வழக்கில் தற்போதுதான் சேர்க்கப்பட்டுள்ளார். கணவருடன் தனது பெயரும் சேர்த்து குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றிருப்பது தொடர்பாக பிரியங்கா காந்தி உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கர் கூறுகையில், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக மட்டுமே அமலாக்கத்துறை, சிபிஐ பயன்படுத்தப்படுவதாக நாங்கள் ஏற்கனவே கூறி வருகிறோம். பிரியங்கா காந்தி வத்ராவின் முழுமையான வழக்கு எங்களுக்குத் தெரியவில்லை என்றாலும், ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் குறிவைக்கப்படும் விதம் முற்றிலும் தவறானது என தெரிவித்த்துள்ளார்.

ஹிமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு மற்றும் காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிர தலைவர் நானா படோல் உள்ளிட்ட சிலர் எதிர்வினையாற்றி இருக்கிறார்கள். "மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் தலைவர்கள் பலரின் பெயர்கள் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெறுகின்றன” என சுகு விமர்சித்தார். நானா படோல், “காங்கிரஸைக் கண்டு பாஜக பயப்படுகிறது" என எள்ளி நகையாடி இருக்கிறார். "அன்று ஆங்கிலேயர்கள் காந்தியைக் கண்டு பயந்தனர். இன்றைய அரசும் காந்தி குடும்பத்தைக் கண்டு பயப்படுகிறது. இவற்றின் மூலம் உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பாஜக முயற்சிக்கிறது" என்றும் நானா குற்றம்சாட்டியுள்ளார்.

Tags :
Advertisement