தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

’காங்கிரஸ் கட்சி உங்கள் தாலியை திருடிவிடும்’ என்று பேசிய மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி!

06:47 AM Apr 24, 2024 IST | admin
Advertisement

ந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி, 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு 88 தொகுதிகளில் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துவருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மேலும் 14 தொகுதிகளுக்கு மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

Advertisement

இதையொட்டொ கர்நாடகாவில் காங்கிரஸும், பாஜகவும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. இதற்காக நடந்த தனது தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேசும் போது,”“மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் பெண்களின் தாலிச் செயின்கள் மீதும் கண்வைப்பார்கள். கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதன்மூலம் காங்கிரஸ் தலைவர்களின் குடும்பங்கள் சொத்துகளை குவித்தன. தற்போது நாட்டு மக்களின் சொத்துகள் மீதும் காங்கிரஸ் கண் வைத்திருக்கிறது. அந்த கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தால் மக்களின் சொத்துகள், வீடுகள் அபகரிக்கப்படும். கொள்ளையடிப்பதை தங்களின் பிறப்புரிமையாக அந்த கட்சி கருதுகிறது” என்று பேசினார்.அதை அடுத்து, இன்று கர்நாடாகவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு "காங்கிரஸ் கட்சி உங்கள் தாலியை திருடிவிடும்” என்று பேசிய பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement

இது குறித்து பிரியங்கா காந்தி பேசுகையில், “நாம் ஏன் ராமரை வணங்குகிறோம். நேர்மையான வழியில் பயணித்து அவர் மக்களுக்காக சேவை செய்தவர் என்பதால். மகாத்மா காந்தியும் அதே வழியை தேர்வு செய்து பயணித்தவர். அவரை துப்பாக்கி குண்டுகள் துளைத்த போதும் ‘ஹே ராம்’ என்று தான் சொன்னார். ஆனால், இன்று நிலையே வேறு. பொய்கள் எங்கும் நிறைந்துள்ளன. அன்றாடம் ஏதேனும் ஒரு நாடகம் அரங்கேறுவதை நாம் பார்த்து வருகிறோம். அனைத்து தவறுகளும் நம் கண் முன்னே நடக்கிறது. நாம் அமைதியாக இருக்கிறோம். மக்கள் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்புகள் நசுக்கப்படுகின்றன. நாங்கள் போராடிக் கொண்டு இருக்கிறோம். நீங்கள் எப்போது போராட உள்ளீர்கள்.அரசியலமைப்பை மாற்றி அமைப்பது குறித்து பேசி வருகிறார்கள். அதில் மாற்றம் நிகழ்ந்தால் என்ன நடக்கும்? மக்களின் உரிமைகள் பலவீனமாகும்.

கடந்த சில நாட்களாக உங்கள் வசம் உள்ள தங்கம் மற்றும் மாங்கல்யத்தை காங்கிரஸ் கட்சி பறிக்கும் என சொல்லப்பட்டு வருகிறது. தேசம் விடுதலை அடைந்து 70 ஆண்டுகள் ஆகிறது. காங்கிரஸ் கட்சி 55 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. யாரேனும் உங்களது தங்கத்தை அல்லது மாங்கல்யத்தை பறித்தார்களா. போரின் போது தேசத்துக்காக தனது தங்கத்தை கொடுத்தவர் இந்திரா காந்தி. மாங்கல்யத்தை தியாகம் செய்தவர் எனது அம்மா. பெண்களின் போராட்டத்தை பாஜகவினரால் புரிந்து கொள்ள முடியாது. அது புரிந்திருந்தால் பிரதமர் மோடி அப்படி பேசியிருக்க மாட்டார். தேர்தலில் வாக்கு பெறுவதற்காக இப்படி பேசுகிறார். மணிப்பூரில் ஆடையின்றி பெண்கள் அழைத்து செல்லப்பட்ட அவலம் குறித்து எதுவும் பேசாமல் இருந்தவர் தானே அவர்” என பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

Tags :
BjpCompaigncongresselectionModiPriyanka Gandhi
Advertisement
Next Article