தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

சீனியர் சிட்டிசன்களுக்கான பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டம் தமிழகத்தில் அமலுக்கு வரவில்லை!

06:43 PM Nov 25, 2024 IST | admin
Advertisement

70 வயது மூத்த குடிமக்​களுக்காக ரூ.5 லட்சம் மதிப்​பிலான ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தை பிரதமர் மோடி அண்மையில் தொடங்கி வைத்தார். இதன் மூலம், எவ்வித வருமான வரம்புமின்றி அரசு மற்றும் தனியார் மருத்​துவ​மனை​களில் கட்டணமின்றி சிகிச்சை பெறமுடி​யும். ஆனால், தமிழகத்தில் ஆயுஷ் மான் பாரத் திட்டம் பயன்பாட்டுக்கு வராததால், இத்திட்​டத்தில் காப்பீடு அட்டை பெற்றும் மூத்த குடிமக்​களால் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்​டுள்ளது.

Advertisement

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் திட்ட இயக்குநர் அருண் தம்பு​ராஜ், “ஆயுஷ்மான் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் வழிகாட்டு​தலுக்காக காத்திருக்​கிறோம். தமிழகத்தில் அமலில் உள்ள முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்​ட​வர்​களும், இந்த புதிய காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற முடியும். அதேபோல், மூத்த குடிமக்​களுக்கான காப்பீட்டு திட்டத்தில் புதிதாக இணைந்​தவர்​களும் பயன் பெறலாம்” என்றார்.

Advertisement

மருத்​துவர்களோ, “காப்​பீட்டுத் திட்டத்தில் தனியார் மருத்​துவ​மனை​களில் சிகிச்​சைக்காக காப்பீட்டு நிறுவனங்கள் அளிக்கும் தொகை மிகவும் குறைவாக இருப்​ப​தால், மீதி தொகையை நோயாளி​களிடம் கேட்கிறார்கள். இதில் பிரச்சினை வருவதால் சில தனியார் மருத்​துவ​மனைகள் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்​சையளிக்க மறுக்​கிறார்கள். இதுவே, அரசு மருத்​துவ​மனை​களில் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்​சைபெற்றால் அதன் மூலம் கிடைக்கும் காப்பீட்டு தொகையானது மருத்​துவ​மனை​களின் மேம்பாட்டுக்​கும், சிகிச்​சையளித்த மருத்​துவக் குழுவுக்கும் பகிர்ந்​தளிக்​கப்​படு​கிறது.

பிரதமரின் ஆயுஷ்மான் திட்டத்தில் இணைபவர்கள் பெரும்​பாலும் தனியார் மருத்​துவ​மனை​களிலேயே சிகிச்சை பெற விரும்​பு​கின்​றனர். இத்திட்டம் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தால் தான் எவ்வித சிரமமும் இன்றி மூத்த குடிமக்​களால் தனியார் மருத்​துவ​மனை​களில் சிகிச்சை பெறமுடிகிறதா என்பது தெரியும்” என்றனர்.

தமிழகத்தில் முதலமைச்​சரின் விரிவான மருத்​துவக் காப்பீட்டுத் திட்டத்​துடன், ‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா’ என்ற திட்டமும் ஒருங்​கிணைத்து செயல்​படுத்​தப்​படு​கிறது.முதலமைச்​சரின் விரிவான மருத்​துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளியின் குடும்பத்​துக்கு ஆண்டுக்கு ரூ.5 காப்பீட்டுத் தொகை வழங்கப்​படு​கிறது. இதற்கான ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சம். இத்திட்​டத்தில் 1 கோடியே 45 லட்சம் குடும்​பங்கள் இணைந்​துள்ளன. தனியார் மருத்​துவ​மனை​களில் ஏழைகள் உயர்தர சிகிச்சை பெறுவதற்காக கொண்டு வரப்பட்ட இந்த காப்பீட்டு திட்டம், காலப்​போக்கில் அரசு மருத்​துவ​மனை​களுக்கும் விரிவுபடுத்​தப்​பட்டது. இந்நிலையில்   முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இணைந்​துள்ள பெரும்​பாலான தனியார் மருத்​துவ​மனை​களில் பெரும்​பாலும் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்​சையளிக்க மறுக்​கிறார்கள். சிலர், “நாங்கள் காப்பீட்டுத் திட்டத்தில் இந்த நோய்க்கு மட்டும் தான் சிகிச்​சையளிப்​போம்” எனவும் தட்டிக் கழிக்​கிறார்கள். எனவே நல்ல நோக்கத்​துக்காக கொண்டு​வரப்பட்ட ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தை செயல்​படுத்து​வதற்கான தடைகளை நீக்கி தமிழகத்து மூத்த குடிமக்​களையும் ​முகம் மலரச் செய்​யட்​டும் தமிழக அரசு!

Tags :
‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா’Ayushman Bharat insurance schemePrime Ministersenior citizensTamil Naduமூத்த குடிமக்கள்
Advertisement
Next Article