தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பிரதமர் மோடி எழுதி ஹிட் ஆன பாடல் கிராமி விருதுக்கு பரிந்துரை!

09:18 PM Nov 11, 2023 IST | admin
Advertisement

ர்வதேச அளவிலான இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக கிராமி விருதுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவில் சிறந்த பாடல், ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் போன்றோர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் 2024-ம் ஆண்டிற்கான 66வது ‘கிராமி விருதுகள்’ இன்னும் 85 நாட்களில் நடைபெற இருப்பதாக தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்டுள்ளது. விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலை அவ்வப்போது விருதுக்கான குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடியின் ‘அபண்டன்ஸ் இன் மில்லட்ஸ்’ பாடல் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்தத் தகவல் கிராமி விருது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை இந்திய-அமெரிக்க பாடகர் ஃபால்குனி ஷா, பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து சிறு தானியங்களை (தானியங்கள்) மேம்படுத்துவதற்காக இயற்றியுள்ளார்.இந்த பாடல் சிறந்த உலகளாவிய இசை செயல்திறன் பிரிவின் கீழ் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மும்பையில் பிறந்த பாடகர்-பாடலாசிரியர் ஃபால்குனி ஷா மற்றும் அவரது கணவர் மற்றும் பாடகர் கௌரவ் ஷா ஆகியோர் ஒன்றிணைந்து இந்த பாடலை வழங்கியுள்ளனர்.

Advertisement

இயற்கையோடு இணைந்து வாழ்வதே நம் எதிர்காலம் என்று சொல்ல வேண்டியது கட்டாயமாகி விட்டது. அதற்கு நமக்கு துணையாக இருப்பவை சிறுதானியங்கள். நம் பாட்டியும் தாத்தாவும் வயதான காலத்திலும் ஆரோக்கியத்தோடு வாழ்வதைப் பார்த்திருப்போம். அதற்குக் காரணம், அவர்கள் சிறுவயதில் சாப்பிட்ட சிறு தானியங்களால் ஆன பாரம்பர்ய உணவு வகைகளே. ஆனால் சென்ற தலைமுறையில் நம் உணவு முறையிலும், உணவுப் பொருட்களிலும் ஏற்பட்ட மாற்றம், நமது ஆரோக்கியத்தையும் ஆயுளையும் சுருக்கிவிட்டது. எதிர்காலத் தலைமுறையினருக்காகவாவது இயற்கை விவசாயத்தையும் நம் பாரம்பர்ய உணவுமுறையையும் மீட்டெடுக்கவேண்டிய தருணம் இது. ஏழு சிறு தானியங்கள், அவை தரும் எக்கச்சக்க பலன்கள்... சிறுதானியங்களில் கஞ்சி, கூழ், களி, தோசை, பொங்கல், அடை, பிரியாணி, கொழுக்கட்டை, இனிப்பு, கார பலகாரங்கள் போன்ற பல சுவையான, ஆரோக்கியம் பெருக்கும் உணவுகளைத் தயாரிக்கலாம். நோயற்ற வாழ்க்கைக்கு வழிகாட்டும் சிறுதானியங்களை உணவில் சேர்ந்துக் கொள்ளும் நோக்கில் இந்தாண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐநா அமைப்பு அறிவித்தது.

குறிப்பாக இந்தியாவின் பரிந்துரையை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆண்டு நெடுக சிறுதானியத்தின் அருமை பெருமைகளை பரப்பும் பணிகளை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. சிறுதானியம் விளைவிக்கும் பரப்பினை அதிகரிக்க விவசாயிகளுக்கு சலுகைகள் வழங்குவது முதல் ஜி20 மாநாட்டின் விருந்தினர்களுக்கு சிறுதானிய உணவு பரிமாறுவது வரை அவை நீண்டன.மேலும் பிரதமர் மோடியும் தனிப்பட்ட வகையில் சிறுதானியத்தின் சிறப்பினை பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளார். சிறுதானியம் குறித்த மோடியின் பிரபல உரை ஒன்றை மையமாகக் கொண்டு, இந்திய அமெரிக்க பாடகியான பால்குனி ஷா அவரது கணவர் கவுரவ் ஷா ஆகியோர் பாடல் ஒன்றினை எழுதினர். இதற்காக பிரதமர் மோடியை சந்தித்து, பாடல் உருவாக்கத்தில் அவரையும் உள்ளடக்கினார்கள். இவ்வாறாக ’அபன்டன்ஸ் இன் மில்லட்ஸ்’ இசைப்பாடல் பிறந்தது.

இந்நிலையில்தான் சிறுதானியத்தின் புகழ்பாடும் இந்தப் பாடல் 66-வது கிராமி விருதுக்கான போட்டியில் இணைந்திருக்கிறது. இதனை விருது வழங்குவோர் அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளனர். இந்தியாவின் பாரம்பரியமிக்க, ஊட்டச்சத்துகள் நிறைந்த சிறுதானியத்தின் சிறப்பை உலகெங்கும் கொண்டு செல்லும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட இந்த பாடல், தற்போது கிராமி விருதுக்கான கோதாவில் குதித்துள்ளது.

”மாற்றத்தை உருவாக்கி மனிதகுலத்தை உய்விக்கும் சக்தி இசைக்கு உண்டு. பிரதமர் மோடியை சந்தித்தபோது, பசியாற்றவும், சத்துக்களை பெறவும் வழிசெய்யும் சிறுதானியம் குறித்தும் பாடல் உருவாக்க வேண்டும் என்று விரும்பினார். அதன்பொருட்டு அவருடன் கலந்து உருவானதே ’அபன்டன்ஸ் இன் மில்லட்ஸ்’ பாடல்” என்று பாடல் உருவான பின்னணியை விளக்கியிருக்கிறார் பாடகி பால்குனி ஷா. இந்த இசைப்பாடல் கிராமி வென்றால், மோடி மட்டுமன்றி இந்தியாவின் பாரம்பரிய சிறுதானியத்தின் பெருமையும் சர்வதேசளவில் மேலும் பரவ வாய்பிருப்பதென்னவோ நிஜம்.

Tags :
Grammy Award!hitModiNominatedPrime MinisterSirudhaniyagalSmall grainsSong
Advertisement
Next Article