தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பிரதமர் மோடியின் வெட்கக்கேடான விஷயம் - பாரத் ஜோடோ நியாய் யாத்ரா தொடக்க விழாவில் ராகுல் விளாசல்!

01:09 PM Jan 15, 2024 IST | admin
Advertisement

"ஜூன் 29க்கு பின்னர், மணிப்பூர், மணிப்பூராக இல்லை. அது பிளவு பட்டு, எங்கும் வெறுப்பு பரவியது. லட்சக்கணக்கான மக்கள் இழப்பினை சந்தித்துள்ளனர். மக்கள் அவர்களின் கண்ணெதிரிலேயே தங்களின் பிரியமானவர்களை இழந்தார்கள்.ஆனால் இப்போது வரை இந்திய பிரதமர் மோடி உங்களின் கண்ணீரைத் துடைத்து, கரங்களைப் பற்றிக்கொள்ள வரவில்லை. இது ஒரு வெட்கக்கேடான விஷயம். ஒருவேளை பிரதமர் மோடியும், ஆர்எஸ்எஸும் மணிப்பூரை இந்தியாவின் பகுதியாக நினைக்கவில்லையோ. மணிப்பூர் பாஜகவின் அரசியல் சின்னம், மணிப்பூர் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸின் வெறுப்பின் சின்னம், மணிப்பூர் பாஜகவின் கண்ணோட்டம் மற்றும் சித்தாந்தத்தின் சின்னம்." என்று மணிப்பூர் முதல் மும்பை வரையிலான 6,713 கி.மீ தொலைவிலான பாரத் ஜோடோ நியாய யாத்திரை தொடக்க விழாவில் ராகுல்காந்தி பேசினார்.

Advertisement

அகில இந்திய காங்கிரஸின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி, பாரத் ஜோடோ யாத்திரையின் 2வது கட்ட யாத்திரையான பாரத் ஜோடோ நியாய் யாத்திரை இன்று மணிப்பூரில் தொடங்கினார். இந்த யாத்திரையானது சுமார் 6700 கி.மீட்டர் தூரம் நடைபெறுவதுடன், பெரும்பகுதி பேருந்து மூலம் நடைபெறுகிறது. காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ஏற்கனவே கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி முதல் கடந்த ஆண்டு ஜனவரி 30ம் தேதி வரை பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில், இந்திய ஒற்றுமை நடை பயணம் மேற்கொண்டார். அதன்படி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 12 மாநிலங் கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 136 நாட்கள் அவரது நடைபயணம் இருந்தது.

Advertisement

இதன் தொடர்ச்சியாக 2வது கட்ட யாத்திரையை நாட்டின் மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி பயணம் மேற் கொள்கிறார். இந்த யாத்திரைக்கு, ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்’ என்ற பெயரிடப்பட்டு உள்ளது. இந்த யாத்திரையானது நேற்று மணிப்பூரில் தொடங்கியது. மணிப்பூரில் உள்ள தவுபல் மாவட்ட மைதானத்தில் இருந்து ராகுல்காந்தி தனது நியாய் யாத்திரையை தொடங்கினார். இந்த டை பயண தொடக்க விழாவில் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் அக்கட்சியின் முன்னாள் தலைவர்கள் கலந்து கொண்டனர். ராகுலின் இந்த பயணம், மொத்தம் 6713 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேற்கொள்ளப்பட இருக்கிறது. 110 மாவட் டங்கள், 100 எம்.பி. தொகுதிகள் வழியாக 67 நாட்கள் நடைபெற உள்ளது. மணிப்பூர், நாகலாந்து, அசாம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மேற்கு வங்காளம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ் தான், குஜராத் மராட்டியம் ஆகிய 15 மாநிங்களில் நடைபயணம் மேற் கொள்ளப்படும். மார்ச் 20 அல்லது 21-ந் தேதி மும்பையில் பயணம் நிறைவடைய உள்ளது.பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை எழுப்ப மத்திய அரசு வாய்ப்பு அளிக்காததாலும், அரசமைப்பு சட்டம் பாதுகாத்து வரும் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய வற்றை நிலைநாட்டவும், கடந்த 10 ஆண்டுகால மத்திய பா.ஜனதா ஆட்சியின் அநீதிக்கு எதிராக குரல் எழுப்பவும் இந்த பயணம் மேற்கொள்ளப் படுவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, ``பிரதமர் மோடி மணிப்பூருக்கு வாக்கு கேட்க வருகிறார். ஆனால், மணிப்பூர் மக்கள் பிரச்னையில் இருக்கும்போது தன்னுடைய முகத்தைக்கூட அவர் காட்டுவதில்லை. மக்களைத் தூண்டுவதற்காக அனைத்திலும் இவர்கள் (பா.ஜ.க) மதத்தைக் கலக்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.

அவரைத் தொடர்ந்து உரையாற்றிய ராகுல் காந்தி, ``2004 முதல் நான் அரசியலில் இருக்கிறேன். ஆனால், முதன்முறையாக இந்தியாவில் ஆட்சியின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பும் சீர்குலைந்த இடத்துக்குச் வந்திருக்கிறேன். ஜூன் 29-க்குப் பிறகு, மணிப்பூர் மணிப்பூராகவே இல்லை. அது பிளவுபட்டு, எல்லா இடங்களிலும் வெறுப்பு பரவியிருந்தது. லட்சக்கணக்கான மக்கள் இழப்பைச் சந்தித்தனர். மக்கள் கண்ணெதிரே தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தனர். ஆனால், இந்தியப் பிரதமர் இதுவரை உங்கள் கண்ணீரைத் துடைக்கவோ, கையைப் பிடித்து ஆறுதல் கூறவோ இங்கு வரவில்லை. இது மிகவும் வெட்கக்கேடான விஷயம். ஒருவேளை பிரதமர் மோடி, பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்-ஸுக்கு மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாமலிருக்கலாம்.

பா.ஜ.க-வை பொறுத்தவரை, மணிப்பூர் அவர்களின் அரசியல் மற்றும் சித்தாந்தத்தின் சின்னம். மேலும், பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஸின் வெறுப்பின் சின்னம். நீங்கள் மதித்த அனைத்தையும் இழந்துவிட்டீர்கள். ஆனால், நீங்கள் மதித்த அனைத்தையும் மீண்டும் ஒருமுறை கண்டுபிடித்து உங்களிடம் கொண்டு வருவோம். மணிப்பூர் மக்களாகிய நீங்கள் அனுபவித்த வலி, வேதனை, இழப்பு, சோகம் ஆகியவற்றை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எனவே நீங்கள் மதித்ததை மீண்டும் கொண்டு வருவோம் என்று உறுதியளிக்கிறோம். நல்லிணக்கம், அமைதி, பாசம் ஆகியவற்றை மீண்டும் கொண்டு வருவோம்" என்று பேசினார்.

 

முன்னதாக, ராகுல் நடைபயணத்தையொட்டி மணிப்பூர் பா.ஜனதா அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்தது. தொடக்க விழா 1 மணி நேரத்துக்கு மேல் நடைபெறக் கூடாது, நிகழ்ச்சியில் அதிகபட்சமாக 3 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், பேரணியின்போது நாட்டுக்கு எதிரான, மத ரீதியான கோஷங்களை எழுப்பக் கூடாது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அரசு அதிகாரிகளுக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். ஏதேனும் அசாதாரண சூழல் ஏற்படும் நிலையில் அமைதி சட்டம்- ஒழுங்கை பராமரிக்கும் விதமாக நடைபயணத்துக்கான அனுமதி ரத்து செய்யப்படும் என்று தவுபல் துணை கமிஷனர் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. .

Tags :
BharatJodoNyayYatracongressManipurRahulGandhiyatra
Advertisement
Next Article