கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு!
கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படும் நிலையில், டெல்லியில் இந்திய கத்தோலிக்க பாதிரியார்கள் கூட்டமைப்பு நடத்திய கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். குழந்தை இயேசுவின் சிலையை தொட்டு வணங்கினார்.கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நம் நாட்டின் பிரதமர் ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு 1944ல் உருவானது. இந்த அமைப்பின் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ளது. இது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவ சபைகளுடன் நெருக்கமாக செயல்படும் அமைப்பாகும். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அங்கு நேற்று கத்தோலிக்க கிறிஸ்தவ ஆயர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமம் மோடி பேசியது இதுதான் :''கிறிஸ்துவின் போதனைகள் அன்பு, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தைப் போற்றுகின்றன. இந்த உணர்வை வலுப்படுத்த அனைவரும் பணியாற்றுவது முக்கியம். வன்முறையை பரப்பி, சமூகத்தை சீர்குலைக்கும் முயற்சிகள் நடக்கும்போது மனது வலிக்கிறது. போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் இருந்து அருட்தந்தை அலெக்சிஸ் பிரேம் குமாரை பத்திரமாக அழைத்து வந்தது எனக்கு மிகவும் திருப்திகரமான தருணம். அவர் எட்டு மாதங்கள் அங்கேயே சிக்கி, பிணைக் கைதியாக இருந்தார்.
எங்களைப் பொறுத்தவரை, இந்த பணிகள் அனைத்தும் வெறும் தூதரகப் பணிகள் அல்Chirtimaல. நமது குடும்ப உறுப்பினர்களை மீண்டும் அழைத்து வருவதற்கான உணர்ச்சி பூர்வமான அர்ப்பணிப்பு. அவர்கள் எங்கிருந்தாலும், எந்த நெருக்கடியை எதிர்கொண்டாலும், இன்றைய இந்தியா தனது குடிமக்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதை தனது கடமையாகப் பார்க்கிறது.
இந்தியா பின்பற்றும் மனிதாபிமான அணுகுமுறைதான் 21-ம் நூற்றாண்டு உலகத்தை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும். மனித உரிமைகள் பற்றி பெரிதாக பேசிய நாடுகள், கொரோனா சமயத்தில் ஏழை நாடுகளுக்கு உதவாமல் பின்வாங்கின. ஆனால், இந்தியா தனது சக்தியை மீறி, 150-க்கு மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகள் வழங்கியது. பல்வேறு நாடுகளுக்கு தடுப்பூசிகளை அளித்தது. விக்சித் பாரத் கனவு நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கையை எங்கள் இளைஞர்கள் எங்களுக்கு அளித்துள்ளனர். கத்தோலிக்க திருச்சபையின் கர்தினலாக ஜார்ஜ் கூவக்காட்டை போப் பிரான்சிஸ் நியமனம் செய்திருப்பது பெருமைக்குரிய தருணம்''. இவ்வாறு மோடி பேசினார்.