For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

PresVu கண் சொட்டு மருந்து உற்பத்தி உரிமம் ரத்து!

09:03 PM Sep 12, 2024 IST | admin
presvu கண் சொட்டு மருந்து உற்பத்தி உரிமம் ரத்து
Advertisement

ப்ரெஸ்பியோபியா உள்ளவர்களுக்கு கண்ணாடிகளின் தேவையைக் குறைப்பதாகக் கூறும், PresVu எனப்படும் கண் சொட்டு மருந்தை தயாரித்து சந்தைப்படுத்துவதற்கான உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (DCGI) தெரிவித்துள்ளார். ப்ரெஸ்பியோபியா என்பது ஒரு பொதுவான வயது தொடர்பான பிரச்னையாகும்.இந்த பிரச்னை ஏற்பட்டால் நெருக்கமாக இருப்பதை சரியாக பார்க்க முடியாது.

Advertisement

உரிமம் ரத்துக்கான காரணம் என்ன?

கண் சொட்டு மருந்து தயாரிப்பாளரான என்டோட் பார்மாசூட்டிகல்ஸ் , நோயாளிகளின் பாதுகாப்பற்ற பயன்பாடு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த சந்தேகத்தை எழுப்பும் வகையில், அங்கீகரிக்கப்படாத விளம்பரங்களை மேற்கொண்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன . அதாவது, அந்த மருந்தை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால், மருத்துவரின் பரிந்துரை இன்றியே அந்த மருந்த பயன்படுத்தலாம் என்பது போன்ற விளம்பரங்கள் வெளியானதால் உற்பத்தி உரிமம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement

உற்பத்தி நிறுவனம் சொல்வது என்ன?

PresVu கண் மருந்தை உற்பத்தி செய்யும் Entod Pharmaceuticals நிறுவனமோ, நாங்கள் எந்தவொரு நெறிமுறையற்ற அல்லது பொய்யான உண்மைகளை வழங்கவில்லை எனவும், உரிமம் நிறுத்தி வைக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், "DCGI எங்களுக்கு வழங்கிய ஒப்புதல் என்பது 234 நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளுக்கு கிடைத்த வெற்றியின் அடிப்படையிலானது ஆகும். இந்த மருந்து ப்ரெஸ்பியோபியா நோயாளிகளுக்கு செயல்திறன் மற்றும் பாதுகாப்பை வழங்குவதில் வெற்றி பெற்றது. இந்த மருந்தை பயன்படுத்துவதன் மூலம் அவர்கள் கண்கண்ணாடிகள் இல்லாமல் சிறிய அளவிலான வரிகளை கூட படிக்க முடியும்" என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே செயல்திறன் மற்றும் அதே செறிவு கொண்ட மூலப்பொருள் நிறைந்த இத்தகைய கண் சொட்டுகள் US FDA ஆல் அங்கீகரிக்கப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த தீவிர சிக்கல்களும் இல்லாமல் அமெரிக்காவில் சந்தைப்படுத்தப்படுகின்றன. FDA இதை அமெரிக்காவில் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.," என்று PresVu கண் மருந்தை உற்பத்தி செய்யும் Entod Pharmaceuticals நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement