தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ரஷ்யா அதிபர் : புதின் 5-வது முறையாக ஆட்சியில் தொடர்கிறார்!

07:43 PM Mar 18, 2024 IST | admin
Advertisement

ர்வதேச அளவில் வல்லரசு நாடான ரஷ்யாவில் நடந்த அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின், 88 சதவீத வாக்குகளைப் பெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ஐந்தாவது முறையாகவும் தொடர்ந்து 3வது முறையாகவும் அதிபரான புதின் நாட்டு மக்களிடையே வெற்றி உரையாற்றியுள்ளார். அப்போது, “வெற்றிக்குக் காரணமான ஊழியர்களுக்கு நன்றி. மீண்டும் ரஷ்யாவில் எங்களின் ஆட்சி அமைக்கப்படுவதால், நாடு மேலும் வலுப்பெறும். ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை ஒப்புக்கொண்டு மீண்டும் எங்களுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கும் நன்றி. நவீன உலகில் எல்லாம் சாத்தியம் என்று நினைக்கிறேன்.அமெரிக்காவின் நேட்டோ படைகள் ரஷ்யாவுடன் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் உருவாகும். ஆனால், அத்தகையச் சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை என்று எண்ணுகிறேன்” என்று பேசியுள்ளார்.

Advertisement

ரஷ்யாவில் ஆறு வருடங்களுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடக்கும். அந்த வகையில் 2018-க்குப் பிறகு உக்ரைன் - ரஷ்யா போருக்கிடையில், ரஷ்யாவில் அதிபர் தேர்தல் கடந்த15-ம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை எதிர்த்து மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், 1999 முதல் ரஷ்யாவில் அசைக்கமுடியாத தலைவராக இருக்கும் விளாடிமிர் புதின் மட்டுமே வெற்றிபெற வாய்ப்பிருப்பதாக ரஷ்ய ஊடகங்களின் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்தன.

Advertisement

இந்நிலையில், ரஷ்ய அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதில், முதற்கட்ட தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பதிவான வாக்குகளில் 87.8 சதவிகித வாக்குகள் புதினுக்கு பதிவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதன்படி தொடர்ந்து 5-வது முறையாக புதின் அதிபராகத் தொடர்வார் எனக் கூறப்படுகிறது. ரஷ்யாவின் கடந்த 200 ஆண்டுகளுக்கான வரலாற்றில் நீண்ட காலம் பதவியிலிருந்த ஜோசப் ஸ்டாலினைக் கடந்து, தற்போது அந்த இடத்தை விளாடிமிர் புதின் பெற்றிருக்கிறார்.

அதே சமயம் ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் காரணமாக பொருளாதார ரீதியிலான பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. கோவிட் பெரும்தொற்றின் தாக்கும் தனிவதற்குள் போர் தீவிரமடைந்தது. இதனால், ரஷ்யா - உக்ரைன் மட்டும் இல்லாமல் உலக நாடுகளும் கடும் சிரமத்துக்குள்ளாகின. வர்த்தகம், நாடுகளுக்கிடையேயான உறவு போன்றவற்றுடன் பல லட்சக் கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடந்தனர். இந்நிலையில், ரஷ்யாவில் தேர்தல் தொடங்கியதும் உக்ரைன் அந்த நாட்டின் மீதான தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, உக்ரைனையும் அதற்கு உதவும் அமெரிக்கா நேட்டோ படையையும் குறிப்பிட்டு புதின் தனது வெற்றி உரையில் பேசியது குறிப்பிடத்தக்கது.

Tags :
5th time!continues in powerpresidentPutinrussia
Advertisement
Next Article