For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் முகமது முய்சுவின் பிஎன்சி மகத்தான வெற்றி!

10:06 AM Apr 22, 2024 IST | admin
மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் முகமது முய்சுவின் பிஎன்சி மகத்தான வெற்றி
Advertisement

மாலத்தீவின் 20 ஆவது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க நேற்றுத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 93 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது.மாலத்தீவு அதிபர் முகமது முய்சு வின் செயல்பாடுகளால் அண்டை நாடான இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தல் அவரது செல்வாக்கை நிரூபிப்பதற்கான முக்கிய சோதனையாகப் பார்க்கப்பட்டது. இதில், யாரும் எதிர்பார்க்காத வகையில், கிட்டதட்ட 66 இடங்களில் முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்று அசத்தியது. இது நாடாளுமன்றத்தில் 3ல் 2 பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற மாலத்தீவு அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்றாலும், பிஎன்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் எட்டு இடங்கள் மட்டுமே இருந்தன. இதையடுத்து, தற்போதைய தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் இருந்த எம்.டி.பி.க்கு பெரும் அடியாக அமைந்ததுடன், ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாத முயிஸ்ஸூவின் அரசுக்கு பலம் அளிக்கிறது.

Advertisement

அதாவது இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, முகமது முய்சுவின் பிஎன்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 8 எம்பிக்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். இதன் காரணமாக, முய்சு விரும்பிய சட்டங்களை நாடாளுமன்றத்தில் எளிதாக கொண்டு வர முடியபில்லை. முய்சு எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும், எதிர்க்கட்சிகளின் தலையீட்டால் அது முடக்கப்பட்டது. இந்தநிலையில், 66 இடங்களில் தற்போது முய்சுவின் வேட்பாளர்கள் வெற்றிபெற்ற சூழ்நிலையில், அவர் நினைத்த சட்டங்களை நிறைவேற்றி கொள்ளலாம்.

இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கடைப்பிடித்து, சீனாவுடன் நெருங்கி பழகி வந்தவர்தான் இந்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சு. இந்த வெற்றிக்கு பிறகு முய்சு தனது சீன ஆதரவு செயல்பாடுகளை அதிகளவில் அதிகரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement