For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

அமெரிக்க சிட்டிசன் ஆக புதிய கோல்டு கார்டு திட்டம் -அதிபர் டிரம்ப் அறிவிப்பு!.

04:27 PM Feb 26, 2025 IST | admin
அமெரிக்க சிட்டிசன் ஆக புதிய கோல்டு கார்டு திட்டம்  அதிபர் டிரம்ப் அறிவிப்பு
Advertisement

மெரிக்கா அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். தினமும் அவர் வெளியிடும் புது புது அறிவிப்புகள் பரபரப்பை கிளப்பி வருகிறது. அமெரிக்கா மீது அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு அதிக வரி விதிப்பேன் என்று டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்தார். இதற்கிடையே அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று டிரம்ப் அறிவித்தார். அதன்படி அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ளது. இந்தியா, மெக்சிகோ, கொலம்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பலகட்டங்களாக சட்டவிரோதமாக குடியேறியவர்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

Advertisement

இந்த சூழலில் அமெரிக்காவில் புதிதாக குடியேறுபவர்களுக்கு ‘கோல்டு கார்ட்’ என்ற திட்டத்தை டிரம்ப் அறிவித்தார்.இத்திட்டத்தின்படி சுமார் $5 மில்லியன் டாலர் (இந்திய ரூபாயில் 43 கோடி) செலுத்துவோருக்கு கோல்டு கார்டு வழங்கப்படும். தற்போது நடைமுறையில் இருக்கும் கிரீன் கார்டுகளில் இருக்கின்ற வசதிகளுடன், கூடுதலாக பிற சலுகை மற்றும் வசதிகளுடன் கோல்டு கார்டு உருவாக்கப்படும். இந்தத் திட்டம் அடுத்த இரண்டு வாரங்களில் தொடங்கப்படும். கோல்டு கார்டு திட்டமானது, தற்போதுள்ள நடைமுறையில் இருக்கும் இபி-5 திட்டத்திற்கு மாறானதாக இருக்கும். பொதுவாக நடைமுறையில் இருக்கும் இபி-5 திட்டத்தின் கீழ், புலம்பெயர்ந்த முதலீட்டாளர்கள் அமெரிக்க வர்த்தக நிறுவனங்களில் முதலீடு செய்யலாம். காலப்போக்கில் அவர்கள் கிரீன் கார்டுகளைப் பெறலாம்.

Advertisement

இது குறித்து அவர் கூறியதாவது:– “நாங்கள் தங்க அட்டை ஒன்றை விற்பனை செய்ய இருக்கிறோம். க்ரீன் கார்டு போல இது கோல்டு கார்டு. இந்த அட்டைக்கு நாங்கள் 5 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பு படி ரூ.43 கோடி) என விலை நிர்ணயம் செய்துள்ளோம். இதில் க்ரீன் கார்டில் இருக்கும் அனைத்து சலுகைகளும் கிடைக்கும் என்றார்.இதற்கு காங்கிரசின் ஒப்புதலை பெறவேண்டிய அவசியம் தனது நிர்வாகத்துக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து ஓவல் அலுவலகத்தின் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் கூறியதாவது:– இது குடியுரிமைக்கான ஒரு வழியாகும். பணக்காரர்கள் எங்கள் நாட்டுக்கு இந்த கார்டை பெற்று வரலாம். அவர்கள் இங்கே வசதியுடனும், வெற்றிகரமாகவும் இருப்பார்கள். அவர்கள் நிறைய பணம் செலவு செய்வார்கள், நிறைய வரி செலுத்துவார்கள். நிறைய பேரை வேலைக்கு அமர்த்துவார்கள். கோல்டு கார்டு விற்பனை இரண்டு வாரங்களில் துவங்கும். இதை செய்வது முற்றிலும் சட்டபூர்வமானது. அமெரிக்காவில் குடியேறும் முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து கிரீன் கார்டுகளைப் பெற அனுமதிக்கும் தற்போதைய EB-5 என்ற திட்டத்துக்கு இது மாற்றாக இருக்கும் என்றார்.

Tags :
Advertisement