For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பிரீமியர் பத்மினி டாக்சியை இனிமேல் மும்பையில் பார்க்க முடியாது!- முழு விபரம்!

12:54 PM Oct 31, 2023 IST | admin
பிரீமியர் பத்மினி டாக்சியை இனிமேல் மும்பையில் பார்க்க முடியாது   முழு விபரம்
Advertisement

மும்பையில் பல தசாப்தங்களாக நகரத்தின் அடையாளத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த 'காளி-பீலி' என்று அன்புடன் அழைக்கப்படும் கருப்பு மற்றும் மஞ்சள் நிற 'பிரீமியர் பத்மினி' டாக்சிகள் மும்பையின் தெருக்களில் இருந்து விடைபெற்றன. ஆம்.. 60 ஆண்டுகளாக இயங்கிவந்த பிரிமியர் பத்மினி டாக்ஸி தனது பயணத்தை முடித்துக்கொண்டது. அவைகள் இல்லாத அந்த நாட்களை ​​தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, தனக்கு 'டன் நினைவுகளை சுமந்து செல்கின்றன' என்று இந்த டாக்சிகளுக்கு விடைபெறும் வகையில் உணர்ச்சிகரமான ட்வீட்டைப் பகிர்ந்துள்ளார்.

Advertisement

20ம் நூற்றாண்டில்தான் இன்று நாம் பயன்படுத்தும் கார்கள் ‘டாக்ஸி’ என அழைக்கப்பட்டன. அதாவதுடாக்ஸிகள் ஐரோப்பாவில் 19ம் நூற்றாண்டில் Taxe metre என அழைக்கப்பட்டன. பிரெஞ்சு வாசகங்களான இதில் Taxe என்றால் Tariff (கட்டணம்) எனப் பொருள். மீட்டர் என்றால் அதனை அளக்கும் கருவி எனப் பொருள்.

Advertisement

அமெரிக்க கார் விற்பனையாளர் ஜான்ஹெர்சிடம் ஒரு கட்டத்தில் நிறைய கார்கள் தங்க ஆரம்பித்தபோது அதனை வைத்து ‘Cab-Business’ துவங்க எண்ணினார். அப்போது இந்த வாடகைக் கார்களுக்கு ஒரு தனி வண்ணம் தேவை என தீர்மானித்து, எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணமான மஞ்சள் நிறத்தை டாக்ஸிக்கு அடித்து அறிமுகப்படுத்தினார்.

அப்படித்தான் மும்பையில் ஒரு காலத்தில் பிரிமியர் பத்மினி டாக்ஸிகள் மிகவும் பிரபலம். கறுப்பு, மஞ்சள் வண்ணங்கள் இணைந்த டாக்ஸிகள் 1911ம் ஆண்டு அறிமுகமானது. இதனை காலி (Kaali) - பீலி (Peeli) என அழைப்பார்கள். அந்த வகையில் மும்பையில் சுமார் 51,000 டாக்ஸிகள் ஓடுகின்றன.

2007ல், 25 வருடங்களை கடந்த பழைய டாக்ஸிகளை, சாலைகளில் விலக்கி, புது டாக்ஸிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று அரசு அறிவித்தபோது பிரிமியர் ஆட்டோமொபைல்தான் அதிகம் பாதிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் அதன் பத்மினி மாடல் 63,000 வண்டிகள் மும்பை வீதிகளில் ஓடிக் கொண்டிருந்தன. இவற்றிற்கு மாற்றாக மாருதி, ஹூண்டாய், டாடா நிறுவன கார்கள் டாக்சிகளாக அறிமுகமாயின.

பெரிய குடும்பங்கள் பயணிக்க ஏதுவாய் அம்பாசிடர் கார்கள் பயன்பட்டன. இன்று அம்பாசிடர் கார் தயாரிப்பதே நின்றுவிட்டதால் அதன் நடமாட்டமும் பெரிய அளவில் குறைந்து விட்டது. இன்று பல டாக்ஸி சர்வீஸ்கள் மக்களிடம் பிரபலம். உபேர், ஓலா, மெரு, ஈசி கேப்ஸ், டாக்ஸி ஃபார் ஷ்யூர், ஃபாஸ்ட் டிராக், என்.டி.எல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை

இந்நிலையில் மும்பையில் 20 ஆண்டுகளான டாக்ஸிகள் சேவையிலிருந்து அப்புறப்படுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் பிரிமியர் கார் கம்பெனி கடந்த 1964ம் ஆண்டு பத்மினி டாக்ஸிகளை மும்பை நகரில் அறிமுகம் செய்தது. 2000ம் ஆண்டு வரை 100 சதவிகிதம் பிரிமியர் பத்மினி டாக்ஸிகள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. ஆனால் அதன் பிறகு பிரிமியர் கார் கம்பெனி தொழிலாளர் பிரச்னையால் மூடப்பட்டது. பத்மினி கார் தயாரிப்பு நிறுத்தப்பட்டவுடன், அதற்கு மாற்றாக வேறு கம்பெனிகளின் கார்கள் டாக்ஸிகளாக மும்பையில் பதிவு செய்யப்பட்டன. 2003ம் ஆண்டுதான் கடைசியாக பிரிமியர் பத்மினி கார் ஒன்று பதிவு செய்யப்பட்டது. அந்த கார்தான் தற்போது தன் பயணத்தை முடித்துக் கொண்டிருக்கிறது.

டாக்ஸிகளின் ஆயுட்காலம் 20 ஆண்டுகள் மட்டுமே என்று மாநில அரசு கெடு விதித்தால் மொத்தமாக பிரிமியர் பத்மினி டாக்ஸிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைய ஆரம்பித்தது. இதனால் மாருதி போன்ற மற்ற கார்கள் டாக்ஸிகள் வரிசையில் அதிக அளவில் இடம்பிடிக்க ஆரம்பித்தன. இந்தக் கடைசி பிரிமியர் பத்மினி காரை 2003ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி அப்துல் கரீம் என்பவர் பதிவு செய்தார். இந்த காருக்கும் தற்போது 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதை அடுத்து அ ந்த பிரிமியர் பத்மினி பிராண்ட் கார் தன் 60 ஆண்டுக்கால மும்பை சேவையை முடித்துக்கொண்டது.

பல ஆண்டுகளுக்கு முன்பு, மும்பை டாக்சிமென்ஸ் யூனியன், நகரின் முக்கிய டாக்சி ஓட்டுநர் சங்கம், குறைந்தபட்சம் ஒரு 'காலி-பீலி'யையாவது பாதுகாக்க அரசாங்கத்தின் தலையீட்டைக் கோரியது, ஆனால் அவர்களின் முயற்சியில் வெற்றிபெறவில்லை. பிரீமியர் பத்மினி டாக்சிகள் தெருக்களில் இருந்து காணாமல் போயிருந்தாலும், மும்பையின் சுவர்களில் சுவரோவியங்களில் காணப்படும் மக்களின் இதயங்களிலும் கற்பனையிலும் அவை இன்னும் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளன என்பதே உண்மை

Tags :
Advertisement