For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

’பிரேமலு’ - விமர்சனம்!

08:11 PM Mar 16, 2024 IST | admin
’பிரேமலு’   விமர்சனம்
Advertisement

ம்ம தமிழகத்தில் சமீபகாலமாக மோலிவுட் படங்கள் ஹிட்டடித்து வருகின்றன. அதுவும் தமிழில் டப்பிங் செய்யாமலேயே மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான மஞ்ஞுமல் பாய்ஸ் அதிக வசூல் பெற்று சாதனை படைத்து வரும் நிலையில், அடுத்தபடியாக பிரேமலு திரைப்படமும் சாதனை படைத்து வருகிறது. இப்படம் முன்னொரு காலத்தில் முருங்கைக்காய் புகழ் பாக்கியராஜ் பாணி கதைதான் என்றாலும் அதை 2கே கிட்ஸூகளும் கொண்டாடும் வகையில் கொடுத்து அசத்தி விட்டார்கள்.

Advertisement

கதை என்னவென்றால் சச்சின் (அஸ்லான்) நண்பனுடன் படிப்பதற்காக ஹைதராபாத் வருகிறான். வந்த இடத்தில் ஒரு மேரேஜ் பங்க்‌ஷனுக்கு போகும் சச்சின் அங்கு ரேணுவை (மமிதா) கண்டு வழக்கம் போல் மயங்கி காதல் கொள்கிறான். ஐ டி யில் வேலை பார்க்கும் ரேணு சச்சினிடம் நட்பாக பழகுகிறார். இதனிடையே ரேணுவின் டீம் லீடர் அவள் மீது லவ்விட்டு தன் வலையில். வீழ்த்த முயல்கிறான். ஆனால் அவளோ அவனை லீடராக மட்டுமே பார்க்கிறாள். அதேசமயம் சச்சின் நலனில் அக்கறை செலுத்தும் ரேணு அவனை காதலனாக எண்ணாமல் நண்பனாக மட்டும் பார்க்கிறாள். ஒரு கட்டத்தில் சச்சின் தன் காதலை ரேணுவிடம் சொல்கிறான் ஆனால் அவள் அதை ஏற்க மறுக்கிறாள். மனம் வெறுத்துப் போன சச்சின் இனி ஊரில் இருக்க வேண்டாம்.. ஃபாரினுக்கு போய் விடலாம் என்று முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்து விசாவும் பெற்று விடுகிறான். அதே சமயம் சச்சின் பிரிவை உணர்ந்த ரேணு மனதில் சோகமடைகிறாள். அதன் பின்னர்தான் அவளுக்கு சச்சினை தானும் லவ் செய்கிறோம் என்பது.தெரிகிறது. இந்நிலையில் ரேணுவின் லீடர் இவர்களை தாக்க அடியாட்களை அழைத்து வருகிறார். அதன் பிறகு நடப்பது என்ன சச்சின் – ரேணு காதல் என்னவானது என்பதுதான் பிரேமலு ஸ்டோரி.

Advertisement

கொஞ்சூண்டு படங்களில் ஹீரோ ஃப்ரண்டாக நடித்த நஸ்லென், இதில் நாயகனாக நடித்து வரவேற்பு பெற்றிருக்கிறார். கண்டதும் காதல் கொள்வதும், அந்த காதலுக்காக உருகுவதும், பிறகு காதல் தோல்வியால் வாடுவதும் என்று சோக கீதம் வாசிக்க கூடிய வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், அத்தனை இடங்களிலும் ரசிகர்களை குஷிப்படுத்தும் கேரக்டரில் ஸ்கோர் செய்து விடுகிறார் நஸ்லென், அதனால்தானோ என்னவோ காதல் தோல்வியில் கதறி அழுதால் கூட ரசிகர்களுக்கு அவர் மீது எந்தவித பரிதாபமும் ஏற்படவில்லை. அந்த அளவுக்கு வெள்ளந்தியாக நடித்து தனது வேடத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

ஹீரோயினாக நடித்திருக்கும் மமீதா பைஜு, வசன உச்சரிப்பு, உடல்மொழி, எந்த விசயத்தையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கேஷூவலாக ஆக்ட் கொடுத்து முழுப் மதிப்பெண்கள் வாங்கி விடுகிறார். நஸ்லென் உடனான நட்பை கையாள்வது மற்றும் அவரது காதலை எதிர்கொள்வது என்று அத்தனை உணர்வுகளையும் சர்வ சாதாரணமாக எக்ஸ்போஸ் செய்து ரசிக்க வைக்கிறார். அதிலும் தன்னை சுற்றி எத்தனை கதாபாத்திரங்கள் இருந்தாலும், தனது நடிப்பு மூலம் அத்தனை பேரையும் ஓரம் கட்டிவிட்டு, தன்னை முன்னிலைப்படுத்தும் திறன் கொண்ட மமீதா பைஜுவை இனி நிறைய வெள்ளித்திரைகளில் காணலாம்

நாயகனின் ஃப்ரண்டாக நடித்திருக்கும் சங்கீத் பிரதாப், தனது டைமிங் காமெடி மூலம் கவனம் ஈர்க்கிறார். நாயகனின் காதலுக்கு வில்லனாக வந்தாலும் ஷ்யாம் மோகனின் வில்லத்தனம் குழந்தைத்தனமாக இருப்பதோடு, சிரிக்க வைத்து ரசிக்கவே வைக்கிறது. நாயகியின் தோழியாக நடித்திருக்கும் அகிலா பார்கவன், மீனாட்சி ரவீந்திரன், அலுவலக தோழர்களாக நடித்திருக்கும் சமீர் கான், அல்தாப் சலீம் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

விஷ்ணு விஜய் இசை ஒ கே அதேபோல் அஜ்மல் சாபு ஒளிப்பதிவு காட்சிகளுக்கு கண்ணாடி பிரேம் போட்டதுபோல் பளபளக்கிறது.

முன்னரே சொன்னது போல் பாக்யராஜ் பாணியிலான நாயகன் இழுத்த இழுப்புக்கெல்லாம் வரும் ஹீரோயின், ”அய்யே..உன்னை நான் காதலிக்கவில்லை நண்பனாகத் தான் பழகுகிறேன்” என்று சொன்னாலும் எப்படியும் சில சென்டிமென்ட் காட்சிகளை அமைத்து இவர்கள் காதலை டைரக்டர் சேர்த்து வைத்து விடுவார் என்ற ரசிகர்களின் யூகங்களை படிப்படியாக நிறைவேற்றி அதை கிளைமாக்ஸ் ஆகவும் அமைத்திருக்கிறார். அதில் கொஞ்சம் சிணுங்கல், கொஞ்சம் முரண்டு, கொஞ்சம் ஆக்சன், கொஞ்சம் கலகலப்பு, கொஞ்சம் விறுவிறுப்பு என்று கலந்து காட்சிகளை நகர்த்தியிருப்பது தான் படத்தை கிளைமாக்ஸ் வரை நம்மைக் கட்டிப் போடுகிறது.

மொத்தத்தில் - பிரேமலு - தியேட்டரில் போய் காண வேண்டிய ஜாலியான் யூத் லவ் ஸ்டோரி

மார்க் 3.25/5

Tags :
Advertisement