For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பிரபுதேவாவின் பிரம்மாண்ட நடன நிகழ்ச்சி "Prabhu Deva's Vibe"!

06:42 PM Jan 12, 2025 IST | admin
பிரபுதேவாவின் பிரம்மாண்ட நடன நிகழ்ச்சி  prabhu deva s vibe
Advertisement

ந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் பிரபுதேவாவின், பிரம்மாண்டமான நடன நிகழ்ச்சி, இந்தியாவில் முதல் முறையாக நடக்கவுள்ளது. மிக பிரபல நிறுவனமான அருண் ஈவண்ட்ஸ் அருண் நடத்த V.M.R.ரமேஷ், G Star. உமாபதி மற்றும் ஜெய்சங்கர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.இந்த நடன நிகழ்ச்சி வரும் 2025 பிப்ரவரி 23 ஆம் தேதி சென்னையில் நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறுகிறது. நடிகரும் இயக்குனருமான ஹரிகுமார் இந்த பிரம்மாண்டமான ஷோவை இயக்குகிறார். ஆர்ட் டைரக்டர் கிரண் கைவண்ணத்தில் பல்வேறு விதமான செட்டுகள் அமைக்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சிக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் டிக்கெட்களை அறிமுகப்படுத்தும் விழா, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக iBa ( ஐபா) நிறுவனத்தின் ticket iBa என்ற இணையதளத்தை பிரபுதேவா துவக்கிவைத்து முதல் 25000 டிக்கெட்டுகளை iBa நிறுவனத்தின் திட்ட இயக்குனர் P.K அபி மன்னனிடம் வழங்கினார்.

Advertisement

இந்நிகழ்வினில் நடிகர் நடன கலைஞர் பிரபுதேவா பேசியது..

Advertisement

இது மிக இனிமையான தருணம். அருண் ஈவண்ட்ஸ்க்கு என் முதல் நன்றி. நான் இப்படி ஒரு நிகழ்ச்சியை நினைத்துக் கூட பார்த்ததில்லை, அருண் ஈவண்ட்ஸ் முயற்சிதான். ஹரி இதற்கு ஒரு பேக்போனாக இருந்தார். இனி எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் தான். நீங்கள் சினிமா போல எதிர்பார்ப்பீர்கள். சினிமாவில் கட் பண்னி, கட் பண்ணி ஆடுவோம். இதில் அப்படி முடியாது தொடர்ந்து ஆட வேண்டும். அதற்காக தொடர்ந்து ரிகர்சல் செய்து வருகிறேன். உங்களை மகிழ்விக்க வேண்டும். அதற்காக 200 சதவீத உழைப்பை போட்டு வருகிறேன். கண்டிப்பாக உங்களை இந்த நிகழ்வு ஆச்சரியப்படுத்தும்.
எல்லோருக்கும் நன்றி.

நடன நிகழ்வின் இயக்குநர் ஹரிக்குமார் பேசியது…

அருண் ஈவண்ட்ஸ், ரன் டு வின் எனப் போட்டிருக்கிறார்கள். அதே போலத்தான் அருண் 24 நாலு மணி நேரமும் ஓடிக்கொண்டே இருக்கிறார். Clental ரமேஷ் , அருணுக்கு உதவியாக, இந்த நிகழ்வை இணைந்து வழங்குகிறார். அவருக்கு நன்றி. G Star properties நமது டைட்டில் ஸ்பான்சராக வந்துள்ளனர், உமாபதி, ஜெய்சங்கர் இருவருக்கும் நன்றி. ஐவா நிறுவனத்திற்கும் நன்றி. திரையில் 10 வருடம் கடந்தாலே பெரிய விசயம், 30, 40 வருசம் எல்லாம் இருப்பது ஆசிர்வாதம். அதிலும் கோரியொகிராஃபராக இருப்பதும், இப்போதும் ஆட தயாராக இருப்பதும் அதிசயம் தான். அவரோடு இத்தனை நாள் நான் இருக்கிறேன் என்பது எனக்கு பெருமை. இந்த நிகழ்வை ஆரம்பித்த கணத்தில் இருந்து இப்போது வரை, அதைப்பற்றி பேசிக்கொண்டே இருந்தார், ரிகர்சல் எடுத்து வருகிறார். இன்னும் பல விசயங்கள் இருக்கிறது. அருண் ஈவண்ட்ஸுக்கு மீண்டும் நன்றி. அனைவருக்கும் நன்றி,

அருண் ஈவண்ட்ஸ் சார்பில் அருண் பேசியது…

நிறைய மியூசிக் கான்சர்ட் செய்துள்ளேன் ஆனால் டான்ஸ் ஷோ செய்ய வேண்டும் என ஆசை. அதை எப்படி சாத்தியமாக்கலாம் என யோசித்து வந்தேன். அந்த வாய்ப்பை வழங்கிய பிரபுதேவா மாஸ்டருக்கு நன்றி. இப்போதே 23000 டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்து விட்டது. ஓபன் கிரவுண்டில் 5.1 சவுண்ட் செய்துள்ளோம்: ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும். இந்த நிகழ்வுக்கு உறுதுணையாக வேல்ஸ் ஐசரி கணேஷூக்கு நன்றி. இந்த ஷோ கண்டிப்பாக புதிய அளவில் வேறு மாதிரி அனுபவமாக இருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியது..

பிரபுதேவாவை கிட்டதட்ட 30 வருடமாக கவனித்து வருகிறேன். என் குடும்பத்தில் ஒருவர். அருண் ஈவண்ட்ஸ் அருண், எப்போதும் புதுப்புது விசயங்கள் செய்து வருகிறார், எங்கள் நிறுவனத்தில் பல புதிய விசயங்களை செய்வோம், அதைத் தாண்டி அருண் இந்நிகழ்ச்சியில் பல புதிய விசயங்கள் செய்துள்ளார். காலத்தால் அழிக்க முடியாத நிகழ்வாக இந்த நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

வேல்ஸ் ஃபிலிம் இண்டநேஷனல் நிறுவனர் ஐசரி கணேஷ் பேசியதாவது…

பிரபுதேவா மாஸ்டருடன் நான் 30 வருடங்களாக பழகி வருகிறேன். அவரிடம் இந்த மாதிரி ஒரு நிகழ்வை ஏன் நீங்கள் நடத்தக் கூடாதென கேட்டுள்ளேன், இதுவரையிலும் செய்யாமலே இருந்தார். இப்போது இந்தியாவில் முதல்முறையாக இந்த டான்ஸ் நிகழ்வு நடக்கிறது. இதை சாத்தியப்படுத்திய அருண் ஈவண்ட்ஸுக்கு நன்றி, இந்த நிகழ்ச்சிக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளும் செய்வேன் நன்றி.

பிரபுதேவாஸ் வைப் ( Prabhudeva's Vibe) வரும் 2024 பிப்ரவரி 22 ஆம் தேதி சனிக்கிழமை சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Tags :
Advertisement