தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

05:44 PM Dec 10, 2023 IST | admin
Advertisement

மிழ்நாட்டில் நாளை தொடங்கவிருந்த அரையாண்டு பொதுத் தேர்வு வரும் புதன்கிழமை தொடங்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரையாண்டு பொதுத்தேர்வுக்கான புதிய கால அட்டவணை கல்வித்துறை வெளியிடும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் சீருடை ஆகியவற்றை நாளை மறுநாள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு தலா 50 லட்சமும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை சீரமைக்க ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

அனைத்து மாவட்டங்களிலும் அரையாண்டு தேர்வு இரண்டு நாள்கள் ஒத்தி வைக்கப்படுவதாகவும், சென்னை, காஞ்சிபுரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட நான்கு மாவட்டங்களில் பள்ளிகளை தூய்மைப்படுத்த 1.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். புத்தகம் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்பதால் அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில், 6 முதல் 12-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் 13-ம் தேதி தொடங்கி டிசம்பர் 22-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன. அதன்படி 1 முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் நண்பகல் 12. 30 வரை அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது. 6 முதல் 8 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு காலை 10 மணி முதல் நண்பர்கள் 12. 30 மணி வரை நடைபெறுகிறது.9 முதல் 10 மாணவர்களுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 4:30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. 11ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு காலை 9 மணி முதல் நண்பகல் 12. 45 வரை நடைபெறுகிறது. 12ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு பகல் 1.15 முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது.

Tags :
booksexamhalf yearlyschoolstamilnadu
Advertisement
Next Article