போர் -விமர்சனம்!
மணிரத்னத்தின் அசிஸ்டெண்டாக இருந்த இயக்குநர் பிஜாய் நம்பியார் டேவிட், சோலோ, ஸ்வீட் காரம் காஃபி உள்ளிட்ட படங்களை அடுத்து , இந்த முறை இந்த காலத்து கல்லூரி மாணவர்களுக்குள் இடையே நடக்கும் மோதலை மையமாக வைத்து ஏகப்பட்ட பிரச்னைகளை அலசி இருக்கிறார்.. அதாவது ஜஸ்ட் சீனியர், ஜூனியர் மாணவர்கள் மோதல் என்றில்லாமல் ஸ்டூடண்ஸ்களிடையே உள்ள அரசியலையும் ஜாதி பாகுபாடுகளையும் எக்போஸ் செய்து சமுதாய படமாக்க முயன்றிருக்கிறார். அதிலும் டெலி சீரிஸ் டைப்பில் ஏழு சாப்டர்களாகக் கொடுத்து படம் பார்பவர்களை மட்டுமின்றி தானும் கன்ஃபியூஸ் ஆயிட்டேன் என்று ஃபுரூப் செய்து விட்டார்
அதாகப்பட்டதுகாலேஜ் ஒன்றில் ஃபைனல் இயர் படிக்கும் மாணவர்கள் புதிதாக சேரும் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்கின்றனர். த்ங்கள் பேச்சைக் கேட்காதவர்களை அடித்து துன்புறுத்துகின்றனர். அப்படி ஜூனியர் ஸ்டூடண்டாக சேரும் காளிதாஸ் ஜெயராம் சீனியர் மாணவர்களை எதிர்த்து கேள்வி கேட்பதுடன். அவர்களை அடித்து துவம்சம் செய்து விடுகிறார். காளிதாசின் இந்த ஆக்ரோஷத்தை சீனியர் ஸ்டூடண்ட்களில் ஒருவரான அர்ஜுன் தாஸ் தட்டி கேட்கிறார். இதனால் இரு தரப்புக்கும் மோதல் போக்கு ஏற்பட்டு அடிக்கடி அடிதடியும் நடக்கிறது. ஒரு சூழலில் அர்ஜுன் தாஸ் தன்னை சிறிய வயதில் சக மாணவர்களிடம் மாட்டிவிட்டு அடிவாங்க செய்தவர் என்பதை காளிதாஸ் ஜெயராம் அறிந்து கொள்கிறார் . இதனால் அர்ஜுன் தாஸ் மீது காளிதாசுக்கு கோபம் அதிகமாகிறது. சிறு வயது கோபத்தை தற்போது தீர்த்துக் கொள்ள முடிவு செய்கிறார். இந்நிலையில் கல்லூரி விழா நடக்கிறது. அந்த விழாவை நடத்துவதற்காக ஜூனியர் மாணவரிடம் நிர்வாகம் பொறுப்பை ஒப்படைக்கிறது. அதற்கு சீனியர் மாணவர்கள் ஆட்சேபம் தெரிவிக்கின்றனர். ஆனால் காளிதாஸ் அதை விடுவதாக இல்லை. எவ்வளவு சீனியர் மாணவர்கள் வந்தாலும் அவர்களை எதிர்த்து விழாவை நடத்தியே தீருவேன் என்று சபதம் செய்கிறார். இந்நிலையில் விழா முடிந்தவுடன் ஜூனியர் மாணவர் களை தாக்குவதற்காக சீனியர் மாணவர்கள் தயாராகின்றனர். விழா முடிந்ததும் ஜூனியர் மாணவர்களுக்கும், சீனியர் மாணவர்களுக்குமிடையே பிரளயமே தொடங்குகிறது இதன் முடிவு என்னவாகிறது என்பதற்கு பதில் அளிப்பதுதான் போர்.
மூத்த மாணவர் மற்றும் மெயின் ஹீரோவாக நடித்திருக்கும் அர்ஜூன் தாஸ், இது வரை வில்லனாக, அடியாளாக வந்து கவனம் ஈர்த்தவர் இதில் தனது கணீர் குரல் மூலம் நடிப்பிலும் மிரட்டியிருக்கிறார். பிரபு என்ற ரோலில் , கோபக்கார இளைஞராக அவர் திரையில் தோன்றும் போதெல்லாம் அனல் பறக்கிறது. அர்ஜூன் தாஸ் கதை தேர்வில் சற்று கவனம் செலுத்தினால் திரையுலகில் ஒரு பக்கா ஆக்ஷன் ஹீரோ ஆகலாம். மேலும் இந்த கேரக்டர் காலேஜ் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் விதத்தில் உள்ளதை உணர்ந்து ஸ்கோர் செய்திருக்கிறார்.சின்ன வயது பகையை தீர்த்துக் கொள்ளும் பொருட்டு காளிதாஸ், அர்ஜுன் தாசை அடித்து துவம்சம் செய்த நிலையில் “இப்போதாவது உன் கோபம் தீர்ந்ததா?” என்று கேட்டபடி அர்ஜுன் தாஸ் காளிதாசிடம் அடி வாங்குவதும் ஒரு பக்கம் ஆத்திரத்தின் வெளிப்பாடும், இன்னொரு பக்கம் நட்பிற்காக அர்ஜுன் தாஸ் கேட்கும் மன்னிப்பின் அடையாளமுமாக மனதை நெகிழ வைத்து விடுகிறார். ஜூனியர் ஸ்டூடண்டாக வரும் காளிதாஸ் ஜெயராம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் பதிகிறார். சின்ன சின்ன முக பாவனைகள் கூட எரிச்சல் ஊட்டும் படி கொடுத்து கைதட்டல் பெறுகிறார்.
நாயகிகள் சஞ்சனா நடராஜன் டி ஜே பானு ஆகியோர் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர். சீனியர் மாணவியாக வரும் சஞ்சனா நடராஜன் கதாபாத்திரத்திற்கு என்ன வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கிறார். முன்னாள் மாணவியாக வரும் டி ஜே பானு அளவான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி ரசிக்க வைத்து இருக்கிறார். மற்றபடி உடன் நடித்த மற்ற மாணவ மாணவியர் மற்றும் நடிகர்கள் ஆகியோர் அனைவரும் நிறைவான பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர்.
கேமராமேன்கள் ஜிம்சி காலித், பிரிஸ்லி ஆஸ்கர் டிஸோசா ஆகியோரது ஒளிப்பதிவில் பட லெவல் ஆறேழு படிகள் உயர்ந்து விட்டது. . கல்லூரி சம்பந்தப்பட்ட ஃபெஸ்டிவல் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு இடையே நடக்கும் மோதல் மற்றும் மாணவர்களின் வாகன பேரணி போன்ற காட்சிகளை ஒரே ஷாட்டில் படமாக்கி இருப்பதுடன் இரவு நேரக் காட்சிகள் தரமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சச்சிதானந்த சங்கரநாராயணன், ஹரிஷ் வெங்கட், கௌரவ் காட்கிண்டி ஆகியோரது இசையில் பாடல்கள் சுமார் பின்னணி இசை ஓகே. படத்தின் இறுதியில் வரும் இளையராஜா பாடல் சிறப்பாக அமைந்திருக்கிறது.
படத்தின் மேக்கிங்கில் மட்டும் எக்கச்சக்க கவனம் செலுத்தி இருக்கும் டைரக்டர் பிஜாய் ந ஏனோ அதென்ன கல்லூரி என்பதைக் கூட முடிவெடுத்து திரைக்கதையில் கோட்டை விட்டு இருக்கிறார். மேலும் ஒரு கல்லூரியில் மாணவர்கள் படிக்கும்படியான காட்சிகளை காட்டிலும் போதைப்பொருள் பயன்பாடு, சண்டை, வன்முறை போன்ற காட்சிகள் படத்தில் அதிகம் வருவதெல்லாம் நம்பகத்தன்மை இல்லாமல் இருக்கிறது.
மொத்தத்தில் போர் - எடுபடவில்லை
மார்க் 2.5/5