தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பொங்கல் பரிசு அறிவிப்பு வந்தாச்சு!- அந்த பேமண்ட்..?

07:49 AM Jan 03, 2024 IST | admin
Advertisement

ர்வதேச அளவிலுள்ள தமிழ் மக்களால் வருடந்தோறும் பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டத்தில் தமிழக அரசும் பங்கு கொள்ளும் வகையில், ஆண்டுதோறும் பொங்கல் திருநாளின் போது தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்குவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கக் கூடிய குடும்பங்கள் என 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்புடன் ரூ.1000 ரொக்கம் ஆகியவை பொங்கல் பரிசாக தமிழக அரசால் கடந்த ஆண்டு (2023) வழங்கப்பட்டது.

Advertisement

இந்நிலையில் இந்த ஆண்டும் (2024) பொங்கல் பரிசாக தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கக் கூடிய குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமே இப்போது  அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 238 கோடியே 92 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு அடங்கிய பரிசுப் பொருட்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நியாயவிலைக் கடைகள் மூலம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த அறிவிப்பில் பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு எத்தனை ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்படும் என்பதும் விளக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி ரூ.35.20க்கு கொள்முதல் செய்யப்படும். ஒரு கிலோ சர்க்கரை 5% ஜிஎஸ்டி உடன் சேர்த்து ரூ.40.61க்கு கொள்முதல் செய்யப்படும். மேலும், முழு கரும்பு போக்குவரத்து செலவினம், வெட்டுக்கூலி சேர்த்து ரூ.33க்கு கொள்முதல் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கம் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டு இருந்தது. இந்தாண்டும் இதேபோன்ற பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரூ.1000 ரொக்கம் மற்றும் வேட்டி, புடவை ஆகியவை குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரடியாக வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
pongal giftricesugar
Advertisement
Next Article