தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கட்சிக்கு உரிமை உள்ளது - மெட்ராஸ் ஐகோர்ட்!

01:13 PM Nov 02, 2023 IST | admin
Advertisement

ண்மையில் சென்னையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நீட் விலக்கு – நம் இலக்கு என்ற தலைப்பில் திமுக இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறும் இயக்கத்தில் கையெழுத்திட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்படி நீட் ஒழிப்புக்கான கையெழுத்து இயக்கத்தை திமுக தொடங்கி இருந்தாலும், இதனை மாபெரும் மக்கள் இயக்கமாக தான் முன்னெடுத்து செல்ல வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். நீட் ஒழிப்பு போராட்டத்தில் அதிமுகவும் பங்கேற்க வேண்டும். பாஜகவுடன் கூட்டணி இருந்து வெளியேறிய பின்னர் மாணவர்களின் உரிமைக்கு அதிமுக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டிருந்தார்.

Advertisement

ஆனால், இந்த நீட் ஒழிப்புக்கான கையெழுத்து இயக்கம் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சங்களை முன்வைத்து, குற்றசாட்டுகளை கூறி வருகிறது.. இந்த சமயத்தில், நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்துக்கு எதிராக வழக்கறிஞர் எம்எல் ரவி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.பள்ளி மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்படுவதாக வழக்கறிஞர் எம்எல் ரவி வழக்கு முறையிட்டிருந்தார்.அதை விசாரித்து கையெழுத்து இயக்கத்தால் மனுதாரர் எப்படி பாதிக்கப்படுகிறார்? என தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கட்சிக்கு உரிமை உள்ளது என்று கருத்து தெரிவித்தது.

Advertisement

அது மட்டுமின்றி நீட் விஷயத்தில் மத்திய அரசின் முடிவு மாணவர்கள் நலனுக்கு விரோதமாக அமைந்தால் வழக்கு தொடரலாம். உண்மைத்தன்மையை நிரூபிக்க ரூ.1 லட்சம் டெபாசிட் ஐகோர்ட் கூறியபோது வாபஸ் பெறுவதாக மனுதாரர் பதில் அளித்தார். பொதுநல வழக்குகளை தொடர வரம்பு உள்ளது. சமுதாய நலன் இருந்தால் பொதுநல வழக்குகளை ஏற்கலாம் எனவும் ஐகோர்ட் கூறிய நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்துக்கு எதிரான வழக்கு வாபஸ் பெறப்பட்டது. வழக்கறிஞர் எம்எல் ரவி தொடர்ந்து வழக்கை வாபஸ் பெற்றதால் மனுவை முடித்துவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags :
madras highcourtneet examPolitical Partyprotestreserves right
Advertisement
Next Article