For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

மத்திய அமைச்சரவையில் விமானி வேலை வாய்ப்பு

07:11 PM May 21, 2024 IST | admin
மத்திய அமைச்சரவையில் விமானி வேலை வாய்ப்பு
Advertisement

த்திய அமைச்சரவையில் காலியாகவுள்ள பயிற்சி விமானி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி, சம்பள விவரம், தேர்வு செய்யப்படும் முறை ஆகியவற்றைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisement

பயிற்சி விமானி பணியின் விவரம் :

பதவியின் பெயர் பணியிடம் வயது வரம்பு

Advertisement

பயிற்சி விமானி    15                    20-30

பயிற்சி விமானி கல்வித்தகுதி :

பயிற்சி விமானி பணியிடத்திற்கு 50 சதவீத மதிப்பெண்களுடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், DGCA-விடமிருந்து வணிக விமானி லைசன்ஸ் அல்லது ஹெலிகாப்டர் வணிக விமானி லைசன்ஸ் ஆகியவற்றை பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி விமானி சம்பளம் :

பயிற்சி விமானி பணிக்கு மாதத்திற்கு ரூ.1.52 லட்சம் சம்பளமாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பயிற்சி விமானி தேர்வு செய்யப்படும் முறை :

விமானி லைசன்ஸ் பெறுவதற்கு மேற்கொண்ட தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், பைலட் ஆப்டிட்யூட் தொடர்பான சைக்கோமெட்ரிக் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பயிற்சி விமானி பணிக்கு விண்ணப்பிக்கும் முறை :

பயிற்சி விமானி பணிக்கு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து, கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அதிகாரப்பூர்வ இணையத்தள முகவரி : https://cabsec.gov.in/

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :

Post Bag No.3003,
Lodhi Road,
Head Post Office,
New Delhi - 110003.

பயிற்சி விமானி முக்கிய நாட்கள் :

விவரம் முக்கிய நாட்கள்

விண்ணப்பிக்க கடைசி நாள் 10.06.2024
தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்
நேர்காணல் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்

பயிற்சி விமானி பணியிடங்களுக்கு தகுந்த விவரங்களுடன் ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Tags :
Advertisement