தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

விஜய் சேதுபதி மகன் சூர்யா ஹீரோவாக அறிமுகமாகும் 'ஃபீனிக்ஸ்` டீசர்!

09:27 AM Jun 20, 2024 IST | admin
Advertisement

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘ஃபீனிக்ஸ் வீழான்’. இந்தப் படத்தை பிரபல சண்டை இயக்குநர் அனல் அரசு இயக்குகிறார். ஆக்‌ஷன் - ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாக உருவாகும் இப்படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் தனது குடும்பத்துடன் சூர்யா கலந்து கொண்டார்.

Advertisement

ஆரம்பத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது, ‘அப்பாவின் பெயரை பயன்படுத்தாமல், சூர்யா என்கிற தன்னுடைய பெயருடன் முதல் படத்தில் நடிக்கப்போகிறேன் என கூறியிருந்தார்.இந்த டீசர் வெளியீட்டு விழாவின்போது அதை நினைவுப்படுத்தி பத்திரிகையாளர் கேள்வி கேட்டனர். அதாவது, ‘அப்பாவின் பெயரை பயன்படுத்தாமல் சூர்யா என்ற தன்னுடைய பெயரை மட்டுமே கொண்டு முதல் படத்தில் நடிக்கப் போகிறேன் எனக் கூறியிருந்தீர்களே, இப்போது ஏன் அப்பா வந்திருக்கிறார்?’ என கேட்டதற்கு திகைத்துப் போய் பதில் அளித்துள்ளார் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா. ‘இன்று தந்தையர் தினம். அதனால்தான் என்னுடைய அப்பாவை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறேன். என்னுடைய அம்மா மற்றும் எனது சகோதரி என அனைவரும் வந்திருக்கிறார்கள்’ என பதிலளித்தார் சூர்யா.

Advertisement

டீசர் வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசிய போது: “என் மகன் திரைத்துறைக்குள் வந்தது எதுவும் திட்டமிட்டு நடக்கவில்லை. ‘சங்கத் தமிழன்’ படத்தில் நடித்தபிறகு அனல் அரசு மாஸ்டர் என் மகனை சந்தித்து கதை சொன்னார். இதை நான் துளியும் கற்பனை செய்யவில்லை. திரைத்துறைக்குள் தாக்குப் பிடிப்பது எவ்வளவு கடினம் என்பதை நான் என் மகனுக்கு சொல்லி இருக்கிறேன். ஏனென்றால் சினிமாவில் தாக்குப்பிடிப்பது மிக மிக கஷ்டம்.

நான் அனுபவித்த அழுத்தங்கள் என் குழந்தைக்கு எவ்வளவு பாரமாக இருக்கும் என்பது எனக்கு தெரியும். ஆனால் அவனுக்கு இதுதான் பிடித்திருந்தது. அனல் அரசு என்ற அற்புதமான மனிதரின் மூலமாக அவன் அறிமுகம் ஆகிறான். என் மகன் பிறந்து இதுவரைக்கும் 19 தந்தையர் தினம் கொண்டாடியிருக்கிறேன். ஆனால் இதுதான் எனக்கு மிகச்சிறந்த தந்தையர் தினம்” இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.

Tags :
Phoenixsuryavijaysethupathi
Advertisement
Next Article