10,000 கோடி ரூபாய் நோட்டுகள் இன்னும் மக்களிடமுள்ளது - ரிசர்வ் பேங்க் கவர்னர் தகவல்!
கடந்த மே மாதம் 19ஆம் தேதி ரூ.2000 நோட்டுகள் குறித்து ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டை படிப்படியாக அகற்றும் திட்டத்தை அறிவித்து. ரூ.2,000 நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் அல்லது வங்கியில் கவுண்டரில் ரூ.2,000 நோட்டுகளைக் கொடுத்து அதற்குப் பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. செப். 30க்குள் ரூ.2,000 நோட்டுகளை மாற்றலாம் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் அது அக்டோபர் 7 வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் ரிசர்வ் பேங்க் கவர்னர் சக்திகாந்த தாஸ்` பெரும்பாலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்துவிட்டதாகத் தெரிவித்த அவர், இன்னும் 10,000 கோடி ரூபாய் நோட்டுகள் மட்டுமே மக்களிடம் உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இந்த நோட்டுகளும் திரும்பப் பெறப்படும் அல்லது டெபாசிட் செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், "ரூ. 2,000 நோட்டுகள் திரும்பி வந்து கொண்டே இருக்கிறது. இப்போது ரூ. 10,000 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே சிஸ்டத்தில் உள்ளது. அந்தத் தொகையும் திரும்ப வரும் என்றே நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார். 2000 ரூபாய் நோட்டுகள் பெரும்பாலும் வங்கிகளுக்குத் திரும்ப வந்துவிட்டதையே இது காட்டுகிறது`` என்றார்.
இனி எப்படி மாற்ற முடியும்:
அக்டோபர் 8 முதல் வங்கிகளில் ரூ.2000 நோட்டுகள் பெறப்படாது என அறிவிக்கப்பட்டது. இன்னும் பொதுமக்கள் தங்களிடம் ரூ.2000 நோட்டுகளை வைத்திருந்தால் அதை நேரடியாக ரிசர்வ் வங்கிக்குச் சென்று தான் மாற்ற முடியும். ரிசர்வ் வங்கியின் 19 கிளைகளுக்கு சென்று 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.
தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி கிளைகளுக்கு சென்று ஒரே நேரத்தில் அதிகபட்சம் ரூ.20,000 வரை மாற்றிக் கொள்ளலாம். அந்த தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்... அதேநேரம் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற எந்தவொரு வரம்பு இல்லை.