தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பாராளுமன்றத் தேர்தல் : Doodle வெளியிட்ட Google!

05:07 PM Apr 19, 2024 IST | admin
Advertisement

ம் நாட்டில் 18வது பார்லிமெண்ட்டுக்கு 543 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் இன்று - பஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இன்று 1.87 லட்சம் வாக்குச்சாவடிகளில் 8.4 கோடி ஆண்கள் மற்றும் 8.23 ​​கோடி பெண்கள் உட்பட 16.63 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். முதல் கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Advertisement

 

இன்றையத் தேர்தலில்,

Advertisement

950 வேட்பாளர்கள்.

6.23 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதிப்பெற்றுள்ளனர்.

39 இடங்களில் ஓட்டு எண்ணும் மையம் அமைக்கப்படுகிறது. மொத்தம் 3.32 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

தமிழகத்தில் 874 ஆண் வேட்பாளர்கள், 76 பெண் வேட்பாளர்கள் என மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

39 பொது பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்கள் பணியில் உள்ளனர்.

எனவே, 18வது மக்களவைத் தேர்தலின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், கூகுள் தனது முகப்புப் பக்கத்தில் “கூகுள்” லோகோவிற்குப் பதிலாக, இந்தியத் தேர்தல்களின் ஜனநாயகச் செயல்முறையைக் குறிக்கும் சின்னமான மையால் குறிக்கப்பட்ட உயர்த்தப்பட்ட ஆள்காட்டி விரலைக் doodle வடிவில் வெளியிட்டுள்ளது.நாடெங்கும் வாக்காளர்கள் வாக்களித்த கையோடு அதன் அடையாளமான மை தோய்ந்த விரலை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். மக்களின் அந்த உற்சாக உணர்வை பிரதிபலிக்கும் வகையிலும் இன்றைய கூகுள் டூடுல் அமைந்துள்ளது.

கூகுள் டூடுல் என்பது கூகுள் தேடுபொறி தளத்தில் இடம்பெற்றிருக்கும் கூகுள் லோகோவில் வடிமைக்கப்படும் சுவாரசியமான மாற்றமாகும். உலகின் பிரபலமான விடுமுறை நாட்கள், முக்கியமான தேதிகள், வரலாற்று சிறப்புகள், சமூகத்தில் தாக்கம் செலுத்தும் நபர்கள் உட்பட பல்வேறு உள்ளூர் மற்றும் உலகளாவிய தீம்களுடன் கூகுள் டூடுல் இடம்பெறுவது வழக்கம்.

இதைக் கிளிக் செய்வதன் மூலம் பயனர்கள் இந்தியாவில் தேர்தல்கள் குறித்த சமீபத்திய செய்திகள் மற்றும் பிற விவரங்களை காணமுடிகிறது.

Tags :
Doodle‎electionsGoogleparliamentary
Advertisement
Next Article