For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு; தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல்!

04:12 PM Mar 16, 2024 IST | admin
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு  தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல்
Advertisement

ந்தியா முழுவதும் பார்லிமெண்ட் எலெக்‌ஷன் வருகிற ஏப்ரல் 19ம் தேதி முதல் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

Advertisement

நாட்டின் 17 வது மக்களவை வருகிற ஜூன் மாதம் 16ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு முன்னதாக தேர்தலை நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களாக தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாக வாக்குப்பதிவு நடைபெறும் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மேலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு அரசியல் கட்சிகளுக்கு அவை வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

தேர்தல் நடைபெறும் தேதிகள் குறித்து டெல்லியில் இன்று தேர்தல் ஆணையம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இதில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பிர் சிங் சந்து, ஞானேஷ்குமார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது 18 வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. வருகிற ஏப்ரல் 19ம் தேதி தேதி துவங்கி நடைபெறும் என அவர்கள் அப்போது அறிவித்தனர். ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை ஒரே கட்டமாக நடைபெறும்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல். தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதனால் மத்திய, மாநில அரசுகள் புதிய அறிவிப்புகள் எதையும் வெளியிட முடியாது.

தேர்தலுடன் அருணாச்சலப் பிரதேசம், ஆந்திர பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் விளவங்கோடு தொகுதி உட்பட நாடு முழுவதும் உள்ள 26 மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “96.8 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 49.7 கோடி ஆண் வாக்காளர்கள் மற்றும் 47.1 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். 10.5 லட்சம் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும். 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. வன்முறையின்றி தேர்தலை அமைதியாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலி செய்திகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.1.82 கோடி முதல் முறை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 88.4 லட்சம் பேரும், மூன்றாம் பாலினத்தவர் 48,000 பேரும் வாக்களிக்க உள்ளனர். இளைஞர்கள் 19.74 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். வெளிப்படையான நேர்மையான தேர்தலை நடத்த உறுதி ஏற்றுள்ளோம். 100 வயதுக்கு மேற்பட்ட 2.18 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 85 வயதை கடந்த வாக்காளர்கள் 82 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 40% பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளும் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம்” என்றார்.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement