தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பார்க்கிங் விமர்சனம்!

09:13 PM Nov 29, 2023 IST | admin
Advertisement

மிடில் கிளாஸ் அல்லது அபெளவ் மிடில் கிளாஸ் பேமிலி அடிக்கடியோ அல்லது சில சமயங்களோ எதிர்கொள்ளும் விஷயமே பார்க்கிங் பிராபளம். சென்னை போன்ற பெரு நகரங்களில் பலரும் தங்கள் சில பல லடசம் கொடுத்து வாங்கும் காரை ரோட்டோரம் நிறுத்துவது வாடிக்கை.. இப்படியான சூழலில் ஒரு பார்க்கிங் பிரச்சனை இரண்டு எளிய மனிதர்களின் ஈகோவை தூண்டி விட்டால் அந்த பிரச்சனை எந்த எல்லை வரை செல்லும் என்பதைக் கொஞ்சம் மிகையாக சொல்லி இருக்கும் படமிது. ஆனால் வாடகை வீட்டில் இருக்கும் இருவருக்கும் இடையே இப்படி எல்லாம் நடக்குமா? என்று யோசிக்கும் முன்னரே இப்படி ஏதும் நடந்து விடக் கூடாது என்ற எண்ணத்தை விதைப்பதில் இந்த டீம் ஜெயித்து விட்டது.

Advertisement

அதாவது கவர்மெண்ட் எம்ஃப்ளாயினான எம்.எஸ்.பாஸ்கர், மனைவி மற்றும் மகளோடு வாடகைக்கு 10 வருடங்களாக குடியிருக்கும் வீட்டின் மாடி போர்ஷனுக்கு காதல் திருமணம் செய்துக்கொண்ட ஹரிஷ் கல்யாண் மனைவி இந்துஜா புதிதாக குடி வருகிறார்கள். ஐடியில் ஒர்க் செய்யும் ஹரிஷ் கல்யாண் குடி வந்த சில நாட்களில் புதிதாக கார் ஒன்றை வாங்குகிறார். அந்த காம்பவுண்டில் ஒரு கார்தான் விடமுடியும் என்ற நிலையில் எம்.எஸ்.பாஸ்கர் தனது டூ வீலரை எடுக்க முடியாமல் அவஸதைப்படுகிறார். இதில் இருவருக்கும் வாக்குவாதமும், பிரச்னையும் ஏற்படுகிறது. இதை சமாளிக்க பாஸ்கரும் கார் வாங்குகிறார் .இதனால் காம்பவுண்டுக்குள் யார் காரை விடுவது என்பதில் பெரும் போட்டி ஏற்படு கிறது. இந்த போக்கால் ஒருவரையொருவர் பழிவாங்கும் நிலைக்கு செல்கின்றனர். உச்சபட்சமாக கொலை செய்யும் அளவுக்கு இந்த மோதல் முற்றுகிறது. இதன் முடிவு என்ன ஆகிறது என்பதை விறுவிறுப்பு என்ற பெயரில் கொஞ்சம் ஓவர் டோஸாக சொல்லி இருப்பதே ‘பார்க்கிங்’.

இதுவரை யங் லவர் பாயாக வலம் வந்துக் கொண்டிருந்த ஹரிசுக்கு நடிப்பை வெளிப்படுத்தியே ஆக வேண்டும் என்ற இந்த பரிசோதனையில் வெற்றி பெற்றிருக்கிறார் ஹரிஸ் கல்யாண். சீனிய ஆர்டிஸ்ட் எம் எஸ் பாஸ்கர் முன்பு நடிக்கிறோம் என்ற தயக்கம் கொஞ்சமும் இல்லாமல் ஈஸ்வர் என்ற ஈகோ பிடித்த இளைஞனாக உருமாறி அசத்தியிருக்கிறார் ஹரிஸ்.

Advertisement

எம்.எஸ்.பாஸ்கரும் எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் செல்வேன் என்பதுபோல் முரண்டு பிடித்து நடித்து இருக்கிறார். அரசு ஊழியர் என்ர மிடுக்கோடு நடித்தாலும், தான் ஏற்று கொண்ட ரோலுக்கு ஏற்ற வில்லத்தனத்தை முகத்தில் காட்டி மிரட்டுகிறார். 60 வயதை நெருங்கினாலும் ஈகோவினால் இளைஞரிடம் மோதும் எம்.எஸ்.பாஸ்கரின் நடவடிக்கைகள் அடிமட்டமாக இருப்பதோடு, அவற்றை செய்யும் போது அவர் வெளிப்படுத்தும் நடிப்பு- அடடே காமெடி நடிகர் இப்படியும் ஆக்ட் கொடுக்கிறார் என்று மனநிலை ஏற்படுத்தி கைதட்ட வைத்து விடுகிறார். இந்துஜா, ரமா இருவரும் ஆர்டினரி ஃபேமிலி கேர்ள்ஸ் மனநிலையை அப்பட்டமாகக் காட்டி கணவர், குடும்பம் என்று பதறி இருக்கின்றனர்.

கேமராமேன் ஜிஜு சன்னி மூன்றே மூன்று லொகேஷனில் வடிவமைக்கப்பட்ட திரைக்கதையை தன் பாணியில் படமாக்கியிருப்பதோடு, காட்சிகளை வேகமாகவும் நகர்த்தி சென்றிருக்கிறார். சாம் சி.எஸ் இசை பர்ஃபெக்ட். .
.
படத்தின் ப்ளஸே நாம் தினசரி பார்க்கும் மனிதர்கள், சம்பவங்கள் படத்தின் திரையில் விரிவது தான். அதிலும் அதை திரில்லர் படம் போல் செய்திருப்பது கொஞ்சம் மிகையாக போய் ஒட்டாமல் போய் விடுகிறது. இத்தனைக்கும் இருவரும் வாடகைக்கு குடி இருப்போர்களுக்கிடையே இப்படி எல்லாம் நடப்பதை கற்பனைக்குக் சகிக்கவில்லை.. மேலும் புதுமை இல்லாத சகலரும் யோசிக்க முடிந்த க்ளைமாக்ஸ் மட்டுமின்றி இருவருக்கும் இடையிலான பிரச்சனையின் போது நடக்கும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் யூகிக்க கூடியதாக இருந்தாலும் எல் .எல். ஆர் லைசென்ஸ் வாங்கி ஹைவேஸில் ரேஸ் ஓட்டி தப்பி விட்டார் டைரக்டர் ராம்குமார் பாலகிருஷ்ணன்.

மொத்தத்தில் இந்த பார்க்கிங் - கொஞ்சம் எல்லை மீறிவிட்டது. 

மார்க் 3/5

Tags :
Harish KalyanM S BaskarmovieParkingreview
Advertisement
Next Article