For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

இந்திய ரயில்வேயில் பாரா மெடிக்கல் பணி வாய்ப்பு!

07:05 PM Aug 12, 2024 IST | admin
இந்திய ரயில்வேயில் பாரா மெடிக்கல் பணி வாய்ப்பு
Advertisement

 இந்திய ரயில்வே வாரியம் 1376 பாரா மெடிக்கல் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் RRB பாரா மெடிக்கல் 2024 அறிவிப்பை கவனமாகப் படித்துவிட்டு, தகுதியை உறுதி செய்ய வேண்டும்.

Advertisement

பின்னர், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் வருகின்ற 17.08.2024 முதல் 16.09.2024 வரை விண்ணப்பிக்கலாம். இந்த காலி பணியிடங்களுக்கு அனைத்து மாநிலங்களிலும் பணியமர்த்தப்படுவார்கள். மேலே குறிப்பிட்ட படி, சென்னை ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவில், மட்டும் 143 காலிப்பணியிடங்கள் உள்ளது.

Advertisement

காலியிடங்கள்

Dietician (Level 7)5
Nursing Superintendent713
Audiologist & Speech Therapist4
Clinical Psychologist7
Dental Hygienist3
Dialysis Technician2
Health & Malaria Inspector Gr III126
Laboratory Superintendent27
Perfusionist2
Physiotherapist Grade II20
Occupational Therapist2
Cath Laboratory Technician2
Pharmacist (Entry Grade)246
Radiographer X-Ray Technician64
Speech Therapist1
Cardiac Technician4
Optometrist4
ECG Technician13
Laboratory Assistant Grade II94
Field Worker19

கல்வி தகுதி

நீங்கள் விண்ணப்பிக்கும் பதவிகளுக்கு ஏற்ப சம்மந்தபட்ட துறையில் பட்டம் அல்லது  டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

  1. குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
  2. அதிகபட்ச வயது வரம்பு : 43 ஆண்டுகள்

சம்பளம்

ரூ.19,900 முதல் ரூ.44,900 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். (அந்தந்த பதவிகளுக்கு ஏற்ப மாறுபடும், விரிவான விவரம் அறிவிப்பில் உள்ளது)

கட்டணம்

  • எஸ்ஐ எண்.2 இல் கீழே குறிப்பிடப்பட்டுள்ள கட்டணச் சலுகை வகைகளைத் தவிர அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும்: ரூ.500 வசூலிக்கப்படுகிறது. ஆனால் (இந்த கட்டணம் கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வில் கலந்து கொள்ளும் போது வங்கிக் கட்டணங்களை முறையாகக் கழித்துக் கொண்டு திருப்பித் தரப்படும்).
  • SC/ST/ பெண்/முன்னாள்கள்/ சிறுபான்மையினர்/ பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.250 வசூலிக்கப்படுகிறது. ஆனால் (இந்த கட்டணம் கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வில் கலந்து கொள்ளும் போது வங்கிக் கட்டணங்களை முறையாகக் கழிப்பதன் மூலம் திருப்பித் தரப்படும்).

தேர்வு செயல்முறை:

  1. கணினி அடிப்படையிலான சோதனை,
  2. ஆவண சரிபார்ப்பு
  3. மருத்துவ பரிசோதனை

இவ்வாறு 3 விதமான முறையில் தேர்வு முறை நடந்து இறுதியில் தேர்வுசெய்யப்படும்.

முக்கிய நாட்கள்

விண்ணப்பம் தொடங்கிய தேதி17.08.2024
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி16.09.2024

முக்கிய விவரம்

அதிகாரப்பூர்வ இணையத்தளம்க்ளிக் 
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்ளிக் 
Tags :
Advertisement