தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பணி - விமர்சனம்!

09:23 AM Nov 24, 2024 IST | admin
Advertisement

கிட்டத்தட்ட ஆறாண்டுகளுக்கு முன்னர் அதாவது 2018-ல் ஜோசப் என்ற க்ரைம் த்ரில்லர் படத்தின் மூலம் கேஷூவல் ஆக்டிங் மூலம் மாநிலங்கள் தாண்டி கவனம் ஈர்த்தவர் ஜோஜு ஜார்ஜ்... தமிழிலும் `ஜகமே தந்திரம்' மூலம் அறிமுகமாகி மணிரத்னம்- கமல் காம்போவின் 'தக்-லைஃப்' படத்திலும், கார்த்திக் சுப்புராஜ்- சூர்யா காம்போவுடன் ஒரு படத்திலும் என பிஸியாக வலம் வரும் நடிகர். முன்னதாக மோலிவுட் சினிமாவில் துணை நடிகராக, உதவி இயக்குநராக பல வருடங்களை உழைப்பில் பதியமிட்டவர். ஹீரோவாக பிசியாக இருக்கும் சூழலிலும் இப்போது 'பணி' என்ற படத்தை முதன்முறையாக இயக்கி அசத்தியிருக்கிறார்.

Advertisement

திருச்சூரில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தோடு வலம் வருகிறார் நாயகன் ஜோஜு ஜார்ஜ். அவருக்கு தெரியாமல் அங்கு எதுவும் நடக்காது என்ற சூழலில், குற்ற செயல்களில் ஈடுபடும் இரண்டு இளைஞர்கள் அவரது வாழ்க்கையில் குறுக்கிடுகிறார்கள். அவர்கள் மூலம் நினைத்து கூட பார்க்க முடியாத இழப்பு ஜோஜு ஜார்ஜுக்கு ஏற்படுகிறது. அதனால் அவர்களை பழி தீர்க்க, அவரது மொத்த சாம்ராஜ்யமே களத்தில் இறங்க, அந்த இளைஞர்கள் எதிர்பார்க்காத வகையில் பதிலடி கொடுக்கிறார்கள். அவர்களின் பதிலடியை முறியடித்து தனது பாணியில் அவர்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத தண்டனை கொடுக்க களம் இறங்கும் ஜோஜு ஜார்ஜ், அதை எப்படி செய்து முடிக்கிறார் என்பதே ‘பணி’ படக் கதை.

Advertisement

சிம்பிளான கதைதான்..கூடவே `வேட்டையாடு விளையாடு', `நான் மகான் அல்ல' படங்களை ஞாபகப்படுத்தினாலும் இக்கதையை கொஞ்சம் கொஞ்சமாக சுவாரஸ்யம் கூட்டி ஒரு அட்டகாசமான கமர்ஷியல் மசாலாவாக தந்துள்ளனர்.

ஜோஜு ஜார்ஜ் கண்டிப்பாக முதல் படம் இயக்கியது போல தெரியவில்லை, கச்சிதமாக காட்சிகளை அடுக்கி க்ளைமாக்ஸுக்கு கூட்டிச் செல்கிறார். செம்ம இண்டன்ஸான மேக்கிங். குறிப்பாக பல காட்சிகளில் அவர் எழுத்தின் மெனக்கெடல் தெரிகிறது. `எனக்கு ரத்தம் வந்தாலும் வலிக்கல... ஏன்னா உனக்கு கொடுத்த வலி இந்தக் காயத்தைவிட பெரிசு'', ` ஒரு பெண் தன்னோட அனுமதியில்லாம ஒருத்தன் வற்புறுத்தித் தொட்டதை நினைச்சு வேதனைப்படக்கூடாது... அவமானமா நினைச்சு அழக்கூடாது.

மோலிவுட் படங்களுக்கு நிலவியல் மிகப்பெரிய பலம். அந்த நிலம் அத்தனை அழகாக காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது. அவர்கள் காட்சிகள் தரும் லைவ்வான உணர்வு இன்னொரு பலம்.

ஒவ்வொரு நடிகர்களும் அற்புதமான நடிப்பை தந்துள்ளார்கள். அபிநயாவிற்கு பெயர் சொல்லும் பாத்திரம். மிக தைரியமாக அதை ஏற்று நடித்திருக்கிறார். வில்லன்களாக வரும் அந்த இரண்டு இளைஞர்கள் மிரட்டி விட்டார்கள்.

இரவில் தான் பல காட்சிகள் வருகிறது கேமரா விளையாடியிருக்கிறது. அந்த கார் சேஸிங் காட்சி எல்லாம் அத்தனை மிரட்டலாக இருந்தது. இசை சாம் சிஸ் செதுக்கியிருக்கிறார்.

தமிழில் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே மறந்து போய் விடுகிறது. அத்தனை கச்சிதமாக தமிழ் படுத்தியிருந்தார்கள். சில பல லாஜிக் மிஸ்ஸானாலும் திரைக்கதையில் இரண்டாம் பாதியில் அதிக வேகம் இருப்பது ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு செம தீனி போட்டிருக்கிறது என்று சொல்லலாம். படமெங்கும் வியாபித்துக் கிடக்கும் ரத்தச் சிதறல்கள் சிலருக்கு மிரட்சியையும் ஏற்படுத்தலாம்

கேரளாவில் 5 வாரங்கள் கடந்து பம்பர் ஹிட்டாகிவிட்டது. இப்போது தமிழில் வந்து கவரவும் செய்கிறது.

மார்க் 3/5

Tags :
AbhinayaJoju GeorgeJunaizmovie . reviewPaniSagarSanthosh Narayananஜோஜு ஜார்ஜ்.பணிவிமர்சனம்
Advertisement
Next Article