For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடப் போகும் பாகிஸ்தான் புதிய அணி அறிவிப்பு..!

07:16 PM Nov 20, 2023 IST | admin
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட்  தொடரில் விளையாடப் போகும் பாகிஸ்தான் புதிய அணி அறிவிப்பு
Advertisement

ண்மையில் நடந்து முடிந்த ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி 9 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியையும் தழுவி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்து அரையிறுதி தகுதிக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதைத்தொடர்ந்து கேப்டன் பாபர் ஆசாமும் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

Advertisement

பின்னர் பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ஷஹீன் அப்ரிடியும், டெஸ்ட் கேப்டனாக ஷான் மசூத் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கேப்டன் ஷான் மசூத் தலைமையில் பாகிஸ்தான் அணி தங்களது முதல் டெஸ்ட் தொடரை விளையாட உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி டிசம்பர் 14 முதல் 18 வரையும் , 2-வது போட்டி டிசம்பர் 26 முதல் 30 வரையும் 3-வது போட்டி ஜனவரி 03 முதல் 07 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Advertisement

டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி:

ஷான் மசூத் (சி), பாபர், ஷஹீன், அமீர் ஜமால், அப்துல்லா ஷபீக், அப்ரார், ஃபஹீம், ஹசன் அலி, இமாம், குர்ரம் ஷெஹ்சாத், மிர் ஹம்சா, ரிஸ்வான், வாசிம் ஜூனியர், நௌமன் அலி, சைம் அயூப், ஆகா சல்மான், சர்ஃபராஸ் (விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல் ஆகியோர் இடம்பெறுள்ளனர்.

Tags :
Advertisement