தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

உலகளவில் 8ல் ஒரு பெண்/சிறுமிக்கு பாலியல் தொல்லை-யுனிசெப்!

06:10 PM Oct 11, 2024 IST | admin
Advertisement

சிறுவர் / சிறுமியர் மீதான பாலியல் குற்றங்களை எதிர்கொள்ளும் போக்சோ உள்ளிட்ட சட்டம் மீதான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இப்ப்படியான பிரிவின் கீழ் வழக்குப் பதிவும் அதிகரித்துள்ளது. ஆனால், குற்றங்களை நிரூபிக்க முடியாமல் நீதி விசாரணையில் குற்றமிழைத்தோர் தப்பித்து விடுவதாக குழந்தை நல செயற்பாட்டாளர்கள் வேதனை‌ தெரிவிக்கின்றனர். அதாவது போக்சோ மாதிரியான வழக்கில் 95 சதவீதத்துக்கும் மேலான குற்றவாளிகள், பாதிக்கப்பட்டோருக்கு தெரிந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். இதனால், வழக்கு விசாரணை அதிக நாட்கள் நடக்கும் போது, பாதிக்கப்பட்டோர் குற்றவாளிகளை கருணை அடிப்படையில் விடுவிக்க நினைத்து பிறழ் சாட்சியாக மாரி விடுவதால் நடந்த தவறு நீர்த்து போய் விடுகிறது. இச்சூழலில் பன்னாட்டு பெண் குழந்தைகள் தினம் இன்று அக்., 11ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு யுனிசெப் அமைப்பானது பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

Advertisement

அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் இதோ:

Advertisement

* உலகம் முழுவதும் பெண்கள் மற்றும் சிறுமிகள் என 37 கோடி பேர்(அதாவது 8 ல் ஒருவர்) பாலியல் பலாத்காரம் அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி உள்ளனர்.

* இணைய வழியான பாலியல் துன்புறுத்தலுக்கு 65 கோடி பெண்கள் ( 5ல் ஒருவர்) உள்ளாகி இருக்கின்றனர்.

அந்த வகையில் துன்புறுத்தலுக்கு உள்ளாகி உள்ள பெண்களில்,

* 7.9 கோடி பேர் சஹாரா ஆப்ரிக்கா பகுதியையும்

*7.5 கோடி பேர் கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவையும்

*7.3 கோடி பேர் மத்திய மற்றும் தெற்காசியாவையும்

*6.8 கோடி பேர் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவையும்

*4.5 கோடி பேர் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதியையும் சேர்ந்தவர்கள்.

உள்நாட்டு கலவரம் மற்றும் அரசியல் ஸ்திரமற்ற நிலை கொண்ட நாடுகளில் வசிக்கும் பெண்களின் நிலை இன்னும் மோசம். அங்கு நிவாரண முகாம்கள் மற்றும் ஐ.நா., பாதுகாப்பு இயக்கம் ஏற்பாடு செய்த பகுதிகளில் வசிக்கும் பெண்களில் 4 ல் ஒருவர் பாலியல் வன்முறைக்கு அதிகம் உள்ளாகி இருக்கின்றனர்.

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுமிகளில் பெரும்பாலானோர் வயது 14 முதல் 17 வரை தான் இருக்கிறது. இந்த சித்ரவதையால் பாதிக்கப்படும் சிறுமிகள் மீண்டும் அதே போன்றதொரு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். இதனால் சிறுமிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் நீண்ட நாட்களுக்கு இருக்கிறது. மன அழுத்தம், மன சோர்வு ஆகியவற்றால் அவதிப்படுகின்றனர். பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள், போதைப்பொருள் துஷ்பிரயோகம் ஆகியவற்றாலும் அவதிப்படுகின்றனர். தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை வெளியில் கூறாத சிறுமிகள் மற்றும் பெண்கள் நிலைமை இதைவிட மோசமாக இருக்கிறது.

பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் என உலகளவில் 24 முதல் 31 கோடி பேர் குழந்தை பருவத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி உள்ளனர். இணையவழியில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் 53 கோடியாக உள்ளது. என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
1 in 8before the age of 18Child protectionexperienced rapeGlobalMore than 370 million girlsSexual abuseSexual assaultUNICEFUNICEF estimateswomen alive today
Advertisement
Next Article