For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஒரு நொடி - விமர்சனம்!

07:52 PM Apr 26, 2024 IST | admin
ஒரு நொடி   விமர்சனம்
Advertisement

ரு நொடியின் அருமை தெரிய வேண்டுமா? விபத்தில் உயிர் தப்பியவரைக் கேளுங்கள் என்றும் ஒரு மில்லி-நொடியின் அருமை தெரிய வேண்டுமா?ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரைக் கேளுங்கள் என்பார்கள். அப்படியாப்பட்ட ஒரு நொடியில் நம் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் அல்லது நாம் எடுக்கும் முடிவுகள் வாழ்க்கையே புரட்டிப் போடும் என்ற அடிப்படை தத்துவத்தை மையமாகக் கொண்டு ஒரு பாக்கெட் நாவலுக்குரிய சகல மசாலாக்களுடன் இந்த படம் வழங்கப்பட்டு கவரவே செய்கிறது.

Advertisement

சவுத் தமிழ்நாட்டில் உள்ள ஒரு வில்லேஜ் ஏரியாவில் போட்டோ ஸ்டூடியோ வைத்து பிழைப்பை ஓட்டிக் கொண்டிருந்த எம்.எஸ்.பாஸ்கர் தனது மகளின் கல்யாணத்துக்காக வாங்கிய 6 லட்சம் ரூபாய் கடனை அடைக்க முடியாமல் திண்டாடுகிறார். வட்டியோடு சேர்த்து 8 லட்சம் ரூபாய் ஆன நிலையில் தன்னிடம் வாங்கிய கடனை, கந்து வட்டி தாதாவான ‘கரிமேடு தியாகு’ என்ற வேல ராம்மூர்த்தியிடம் கை மாற்றிவிடுகிறார் கடன் கொடுத்த ஆசாமி. அந்த அடாவடி வேல ராமமூர்த்தியோ எம்.எஸ்.பாஸ்கர் கல்யாணம் கட்டிக் கொடுத்த மகள் வீட்டில் பிரச்சினை செய்வேன் என்று மிரட்டி எம்.எஸ்.பாஸ்கருக்குச் சொந்தமான நிலத்தின் பத்திரத்தை பிடுங்கிச் சென்று விடுகிறார். இதை அடுத்து ஏதேதோ பாடுப்பட்டு அந்த 8 லட்சம் ரூபாயைப் புரட்டியெடுத்துக் கொண்டு வேல ராம்மூர்த்தியை சந்திக்க சென்ற எம்.எஸ்.பாஸ்கர், அதற்குப் பின் வீடு திரும்பவில்லை. இதனால் பாஸ்கரின் மனைவி ஸ்ரீரஞ்சனி அலங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கிறார். அந்த ஸ்டேஷனின் இளம் இன்ஸ்பெக்டரான இளமாறன் என்ற தமன்குமார் இந்த வழக்கை விசாரித்து வேல ராமமூர்த்தியையும், அவரது கூட்டாளிகள் நால்வரையும் விசாரிக்கிறார். இதே நேரத்தில் அதே ஊரை சேர்ந்த நிகிதா என்ற இளம் பெண் ஒரு தென்னந்தோப்பில் படுகொலை செய்யப்படுகிறார். இந்த இரண்டு சம்பவங்களிலும் இன்ஸ்பெக்டர் தமன்குமார் உண்மையை கண்டறியும் முயற்சியில் இறங்க, அடுத்தடுத்து எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கிறது. உண்மையில் இரண்டு சம்பவங்களிலும் நடந்தது என்ன? என்பதை 128 நிமிடங்கள் கொண்ட இந்த ஒரு நொடிப் படத்தில் முன்னரே சொன்னது போல் க்ரைம், , சஸ்பென்ஸ், திரில்லர் என சகல மசாலாக்களையும் அளவாக கலந்து புது டைப்பிலான ஸ்கீரின் பிளேயில் இண்ட்ரஸ்டிங்கவே சொல்லியிருக்கிறார் புதுமுக டைரக்டரான பி.மணிவர்மன்.

Advertisement

கிடைத்த கேரக்டரின் கனத்தைப் புரிந்து மிடுக்கான தோற்றம், பக்குவமான நடிப்பு என்று பரிதி இளம்மாறன் என்ற இன்ஸ்பெக்டர் ரோலுக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் தமன் குமார். கடத்தல் மற்றும் கொலை வழக்குகளை அவர் எதிர்கொள்ளும் விதம் மற்றும் எம்.எல்.ஏ., கந்து வட்டி ரவுடி போன்றவர்களை கையாளும் விதங்களை தனது அளவான நடிப்பு மூலம் ரசிக்க வைத்து விடுகிறார்.ஆனால் இந்த கேரக்டருக்குரிய கடுமையை , வெறுப்பைக் காட்டி இருக்கலாம். வேல ராமமூர்த்தி, வழக்கமான முறைப்போடு நடித்தாலும், காவல்துறை அதிகாரியிடம் தனது கோபத்தையும், திமிரும் ரசிக்கவே வைக்கிறது. கிடைத்த எல்லா ரோலுக்கும்ம் உயிர் கொடுத்து விடும் எம்.எஸ். பாஸ்கர் சேகரன் என்ற கதாப்பாத்திரத்தில் படத்தின் முதுகெலும்பாக நடித்து வழக்கம் போல் பலே சொல்ல வைக்கிரார். சிறிது நேரத்திலேயே , காணாமல் போய் விடுபவராக நடித்திருந்தாலும், பிளாஸ்பேக்கில் அவ்வப்போது தலைகாட்டி ஸ்கோர் செய்கிறார். எம்.எல்.ஏ-வாக நடித்திருக்கும் பழ.கருப்பையாவின் அறிமுகம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், திரைக்கதையோட்டத்திற்கு பயன்படும் ஒரு வேடமாக வந்து போகிறார்.

கேமராமேன் கே.ஜி.ரத்தீஷ் மொத்த படமும் லோ பட்ஜெட் என்று தெரிந்த நிலையிலும் கேமரா மூலம் காட்சிகளுக்கு உயிரோட்டம் அளித்து காஸ்ட்லி லுக் கொடுத்திருகிறார். குறிப்பாக ஒரே சமாச்சாரத்தை பல கதாபாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்தும் காட்சிகளை வித்தியாசமான கோணங்களில் படமாக்கி அடடே சொல்ல வைத்திருக்கிறார்.படத்தின் பின்னணி இசை, ஒளிப்பதிவு, திரைக்கதை நகர்வு என அனைத்தும் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. பாடல்கள் பெரிய அளவில் கதையை பாதிக்காத வண்ணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

படம் தொடங்கியது முதல் வந்த ரசிகர்களை சீட் நுனிக்கு வரவழைத்து விட வேண்டும், என்ற ஒற்றை நோக்கத்தில் ஸ்கோர் செய்து விட்டார் டைர்க்டர்மணிவர்மன். முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள் இல்லாமல் அடுத்தடுத்து ட்விஸ்டுகள் கொடுத்து சரியாக இடத்தில் அந்த ட்விஸ்ட்களை கோர்த்திருப்பது மிகவும் ரசிக்க வைக்கிறது.வழக்கம் போல் கொஞ்சம் லாஜிக் மிஸ்டேக் இருந்தாலும் குற்றம் செய்தவர்கள் யார் தான் என்ற சந்தேகத்தை படத்தில் நடித்த அனைத்து கேரக்டர்களிம் மீதும் கொண்டு சேர்த்து “ஒரு நிமிடம்” ரசிகர்களையே யோசிக்க வைத்து விடுவதில் ஜெயித்து விட்டார்கள்.

மொத்தத்தில் ஒரு நொடி -வாவ்

மார்க் 3.5/5

Tags :
Advertisement