ஊட்டி ரேஸ் கோர்ஸ் போய் ECO Park வரப் போகுது டும்..டும்.டும்!
நீலகிரி மாவட்டம் உதகையில் வருவாய் துறையினருக்கு சொந்தமான நிலத்தில் கடந்த 120 ஆண்டு காலமாக மெட்ராஸ் ரேஸ் கிளப் குத்தகைக்கு எடுத்து குதிரை பந்தயங்களை நடத்தி வந்தது. இந்த குதிரை பந்தயங்களானது உலக அளவில் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.அரசுக்கு 822 கோடி ரூபாய் குத்தகை தொகை நிலுவையில் உள்ள காரணத்தினால் பிரபலமான ஊட்டி குதிரை பந்தய மைதானத்தை வருவாய் துறையினர் மீட்டனர். கடந்த 21 ஆம் தேதி முறையாக மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் தகுந்த பதில் அளிக்கவில்லை எனக் கூறி வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீட்கப்பட்ட குதிரை பந்தய மைதானத்தில் பிரமாண்ட சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி தொடங்கி விட்டது.
'ரேஸ் பைத்தியம்' என்று ஒரு பிரயோகம் இருந்தது. 'ஒரு முறை குதிரை ரேஸுக்குப் போய் வந்தவன், அவன் சொத்து முழுவதையும் அழிக்கும் வரை அதில் இருந்து மீண்டு வரமாட்டான்!' என்று அஞ்சிய காலம் அது. அப்படி ஒரு போதை அதில் இருந்தது. கிண்டி மற்றும் ஊட்டி குதிரை ரேஸில் கலந்துகொள்ளும் குதிரைகளின் பராக்கிரமங்களைப் பற்றியும், அந்தக் குதிரையை செலுத்தும் ஜாக்கியின் திறமைகளைப் பற்றியும் அன்றைய தினசரிகளில் ஒரு பக்க அளவில் எழுதுவார்கள். பொதுவாக சனி, ஞாயிறு கிழமைகளில் குதிரை ரேஸ் நடக்கும்.பெரிய பெரிய சினிமா நட்சத்திரங்கள் எல்லாம் குதிரை ரேஸ் பைத்தியமாக இருந்தார்கள். டி.எஸ்.ரத்தினம், டி.எஸ்.பாலையா போன்றவர்கள் சினிமா ஷூட்டிங் மாதிரி ரேஸுக்கு கிளம்பிப் போனவர்கள்.
அந்த வகையில் ஊட்டியில் வருவாய் துறையினருக்கு சொந்தமான நிலத்தில் கடந்த 130 ஆண்டு காலமாக மெட்ராஸ் ரேஸ் கிளப் என்ற தனியார் நிறுவனம் குத்தகைக்கு எடுத்து குதிரை பந்தயங்களை கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வந்தது. இந்நிலையில் மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் அரசுக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகையை கடந்த 1978 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கட்டாமல் இருந்து வந்தது.குத்தகையை வழங்கிய மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம், ஊட்டியில் குதிரை பந்தயங்களை நடத்தி வந்திருக்கிறது. இந்த நிலையில், கடந்த பல ஆண்டுகளாக முறையாக குத்தகை செலுத்தாத நிலையில், அதை வசூலிக்கும் முயற்சியில் அரசுத்துறை சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குத்தகை விவகாரம் தொடர்பாக அரசுக்கு எதிராக மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் நீதிமன்றத்தை நாடியிருக்கிறது.
இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குத்தகை பாக்கியை உடனே செலுத்த வேண்டும் என்றும், குத்தகை பாக்கியை செலுத்த தவறும் பட்சத்தில் அதனை கையகப்படுத்தி அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.உத்தரவின் அடிப்படையில் மெட்ராஸ் ரேஸ் கிளப் வசம் இருந்த குதிரை பந்தய மைதானத்திற்கு அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர். மேலும், இந்த நிலம் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதற்கான அறிவிப்பு பதாகைகளையும் அமைத்துள்ளனர்.
இது குறித்து தெரிவித்த ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாராஜ், " ஊட்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் அமைந்துள்ள சுமார் 52.34 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமான நிலம். மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் குத்தகைக்கு எடுத்து குதிரை பந்தயம் நடத்தி வந்தது. 2001 -ம் ஆண்டிலிருந்து முறையாக குத்தகை தொகை செலுத்தவில்லை.மெட்ராஸ் ரேஸ் கிளப் அரசுக்கு செலுத்த வேண்டிய குத்தகை பாக்கி ரூ.822 கோடியாக உயர்ந்தது. இது தொடர்பாக மெட்ராஸ் கிளப் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் குத்தகை பாக்கி செலுத்தாததால் நிலத்தை கையகப்படுத்துமாறு வருவாய்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் இன்று அந்த நிலம் கையகப்படுத்தப்பட்டது" என்றார்.
மைதானம் வருவாய் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள நிலையில் தோட்டக்கலை துறையிடம் ஒப்படைக்கப்பட்டு அங்கு சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு தற்போது அங்கு ECO Park அமைக்க முடிவு செய்யப்பட்டு தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் பூங்கா அமைப்பதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நிலவளம் ரெங்கராஜன்