For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

என்னை மனுஷியாக்குபவை என் உணர்வுகள் மட்டும்தான்!

07:31 AM Oct 22, 2023 IST | admin
என்னை மனுஷியாக்குபவை என் உணர்வுகள் மட்டும்தான்
Advertisement

இன்ஸ்பிரேஷனல் கோட்ஸ்' முகநூல் பக்கத்திலிருந்த ஒரு பதிவு என்னைக் கவர்ந்தது. அதனைத் தமிழாக்கம் செய்துள்ளேன் :-

Advertisement

50 வயதைக் கடந்து 60 நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தோழியிடம், 'உங்களிடம் என்ன மாற்றங்களை உணர்கிறீர்கள் ?' என்று கேட்டேன்.

அவர் அனுப்பிய பதில் இதோ :

Advertisement

1) என் பெற்றோரை, என் உடன் பிறந்தவர்களை, என் இணையரை, என் குழந்தைகளை, என் தோழிகளை நேசித்த பிறகு, இப்போது என்னை நேசிக்கத் துவங்கி உள்ளேன்.

2) நான் 'உலக வரைபடம்' அல்ல என்று உணர்ந்து கொண்டுள்ளேன். இந்த உலகத்தை என் தோள்களில் சுமப்பதில்லை.

3) காய்கறி விற்கும் தங்கச்சியிடம், பழம் விற்கும் தம்பியிடம் பேரம் பேசுவதை நிறுத்தி விட்டேன். பத்து ரூபாய் அதிகமாகக் கொடுத்து விட்டேனே என்று மண்டையை உடைத்துக் கொள்வது இல்லை. அவர்கள் மகள்களின் படிப்புச் செலவுக்கு சேமிக்க இது உதவட்டுமே.

4) உணவகங்களில் கூடுதலாக டிப்ஸ் தருகிறேன். அன்றாட வாழ்க்கையை நடத்த, என்னை விட அதிகமாகப் போராடும் சர்வர் முகம் மலரலாம்.

5) 'எத்தனை தடவை இந்தக் கதையைச் சொல்லுவீங்க' என்று இப்போதெல்லாம் முதியவர்களிடம் சொல்வதில்லை. அவர்கள் இந்தக் கதைகளால், தமது பழைய நினைவுகளை அசை போடுகிறார்கள்; கடந்த காலத்திலிருந்து விடுபடுகிறார்கள்.

6) சில நேரங்களில் பிறர் சொல்வது தவறு என்று தெரிந்தாலும், அவர்களைத் திருத்தாமலிருக்கக் கற்றுக் கொண்டேன். எல்லோரையும் திருத்தும் பொறுப்பு என்னுடையது அல்ல. எல்லோரும் சரியாக இருக்க வேண்டும் என்பதை விட என் மன அமைதி எனக்கு முக்கியம்.

7) பெருந்தன்மையுடன், தாராளமாகப் பாராட்டுகிறேன். இது, பாராட்டுப் பெறுபவருக்கு மட்டுமல்ல, என்னுடைய மனதுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. சின்ன ஆலோசனை - ஒருவர் உங்களைப் பாராட்டும்போது, ஒருபோதும் மறுக்காதீர்கள், நன்றி சொல்லி முழுமையாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

😎 என்னுடைய ஆடையில் எண்ணெய்க் கறை பட்டு விட்டால் அலட்டிக் கொள்வதில்லை. தோற்றத்தை விட ஆளுமைதான் உரக்கப் பேசுகிறது.

9) என்னுடைய மதிப்பை உணராதவர்களிடம் இருந்து விலகிப் போகிறேன். அவர்கள் என் மதிப்பை அறியாமல் இருக்கலாம், நான் அறிவேன்.

10) யாராவது பந்தயத்தில் என்னை முந்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டு, மோசமாகச் செயல்பட்டாலும் நான் நிதானமாகவே இருக்கிறேன். நான் பந்தயத்தில் இல்லை. என் வாழ்க்கையை வாழ்கிறேன்.

11) என் உணர்வுகளை எண்ணி சங்கடப்படாமல் இருக்கக் கற்றுக் கொள்கிறேன். என்னை மனுஷியாக்குபவை என் உணர்வுகள் மட்டும்தான்.

12) ஓர் உறவை முறித்துக் கொள்வதை விட, ஈகோ - வை விட்டு விடுவது நல்லது என்று அறிந்து கொண்டுள்ளேன். என் ஈகோ என்னைத் தனிமைப்படுத்தும்; உறவுகளால் நான் தனிமைப்பட்டுப் போக மாட்டேன்.

13) ஒவ்வொரு நாளையும், இறுதி நாளைப் போல வாழக் கற்றுக் கொண்டுள்ளேன். இது கடைசி நாளாகவும் இருக்கலாம்.

14) என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பவற்றைச் செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய சந்தோசத்திற்கு நான்தான் பொறுப்பு. மகிழ்ச்சி என்பது ஒரு தேர்வு. அதைத் தேர்ந்தெடுத்து எந்த நேரத்திலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

- என்னுடைய தோழியின் பதில் எல்லா வயதினருக்கும் பொருத்தமானது என்று நினைக்கிறேன், இதைச் செயல்படுத்த 50, 60, 70 வயது வரை காத்திருக்க வேண்டுமா என்ன ?

- கீதா இளங்கோவன்

Tags :
Advertisement