தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

சபரிமலை மகரவிளக்கு பூஜைக்கு முன்பதிவு செய்யும் 80,000 பேருக்கு மட்டுமே அனுமதி!

07:52 PM Oct 07, 2024 IST | admin
Advertisement

ர்வதேச அளவில் புகழ் வாய்ந்த சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டலகால பூஜைகள் நவம்பர் 16ம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு 15ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். இந்நிலையில் வரும் மண்டல, மகரவிளக்கு காலத்தில் பக்தர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய வசதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. பக்தர்களுக்கு சிரமமின்றி தரிசனம் செய்து திரும்புவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக கடந்த வருடம் பக்தர்கள் வருகை அதிகரித்ததாலும், கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீசார் தவறியதாலும் பக்தர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். எனவே பக்தர்களின் சிரமத்தை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள அரசுக்கும், திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கும் கேரள ஐகோர்ட் உத்தரவிட்டது.அப்போது தினசரி ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் உடனடி முன்பதிவு கவுண்டர்கள் தேவையில்லை என்றும் ஐகோர்ட் தெரிவித்தது.

Advertisement

இது குறித்து நேற்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. வரும் மண்டல காலத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்றும், தினசரி பக்தர்கள் எண்ணிக்கையை 80 ஆயிரமாக கட்டுப்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போதே செல்லும் வழியையும் பக்தர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இதன்மூலம் நெரிசல் குறைவான பாதையில் பக்தர்கள் செல்ல முடியும். வனப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும். கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கான இடங்களை தேர்வு செய்து பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும். நிலக்கல், எருமேலியில் கூடுதல் வாகனங்களை நிறுத்த வசதி ஏற்படுத்தப்படும். இவ்வாறு இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Advertisement

ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்,''நடப்பாண்டில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில், ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களின் தேவைக்கு ஏற்ப தரமான அப்பம், அரவணை பிரசாதம் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும். கூட்டம் அதிகமாகும் நாட்களில், பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க வசதி செய்யப்படும்.காட்டு வழி நடை பாதையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். நிலக்கல் மற்றும் எருமேலியில் வாகனங்கள் பார்க்கிங் செய்ய கூடுதல் வசதி செய்யப்படும். சபரிமலை செல்லும் சாலைகள், பார்க்கிங் பகுதிகளில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் இந்த மாத இறுதிக்குள் முடிக்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Tags :
devoteesdharsanamLord Iyyappan KoilsabarimalaSabarimala temple
Advertisement
Next Article