தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

மே முதல் வாரத்தில் BE மற்றும் பிடெக்கிற்கு ஆன்லைன் விண்ணப்பதிவு தொடங்குமாம்!

06:58 PM Apr 23, 2024 IST | admin
Advertisement

மிழ்நாட்டில் 2 மாணவர்களுக்கான ரிசல்ட் வரும் மே 6-ம் தேதி வெளியாகிறது. ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளுக்கு 2 நாள் முன் BE, பிடெக் விண்ணப்பப் பதிவை தொடங்க திட்டமீட்டுள்ளனர். அதையொட்டி விரைவில் விண்ணப்ப பதிவு, கலந்தாய்வு உள்ளிட்ட தேதிகள் வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது.

Advertisement

தமிழகத்தில் ல் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையை, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது. 2024 – 2025ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம், சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகியவற்றை நடத்துவது குறித்த கூட்டம், தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தின் ஆணையர் தலைமையில் நடைபெற்றது.

Advertisement

முன்னதாக தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 1ஆம் தேதி துவங்கி 22ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இத்தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாகும் என அரசுத் தேர்வுத்துறை ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் மே 6ஆம் தேதியிலிருந்தோ அல்லது ஒரு வாரம் முன்பாகவோ துவங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாணவர்களுக்கு ஒரு மாதம் வரை ஆன்லைன் வழியில் பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்பட உள்ளதாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தார்.

பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வை, மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு நடத்தப்பட்ட பின்னர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பொறியியல் படிப்பில் நடப்பாண்டில் புதிய படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அங்கீகாரம் வழங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மே முதல் வாரத்தில்

Tags :
bebtec
Advertisement
Next Article