For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஒரு மணி நேரம் முடங்கிய ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்: மெட்டாவுக்கு 25 கோடி இழப்பு!

06:11 PM Mar 06, 2024 IST | admin
ஒரு மணி நேரம் முடங்கிய ஃபேஸ்புக்  இன்ஸ்டாகிராம்  மெட்டாவுக்கு 25 கோடி இழப்பு
Advertisement

முகநூல் , இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் வெறும் தகவல் பரிமாற்றத்துடன் நின்றுவிடாமல், வீடியோ காலிங், போட்டோ வீடியோ பகிர்தல், வாய்ஸ் காலிங் வசதிகள் உள்ளிட்டவையும் பெற்றுள்ளது. அதிலும் முகநூல் நிறுவனம் தனது சேவையோடு நிறுத்திகொள்ளாமல் வாட்ஸ்அப் போன்ற போட்டி நிறுவனங்களை வாங்கி மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. மேலும், தனக்கு கீழ் செயல்படும் பேஸ்புக், வாட்ஸ்அப் ,இன்ஸ்டாகிராம் போன்ற நிறுவனங்களை ஒருங்கிணைத்து மெட்டா என்ற தாய் நிறுவனத்தை உருவாக்கினார் மார்க் ஜூக்கர்பர்க்.

Advertisement

இந்த நிறுவனங்களில் இருந்து விளம்பரம் மூலமும், தகவல்களை பிற தளங்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் மெட்டா நிறுவனம் பல மில்லியன் டாலர் அளவுக்கு வருமானம் ஈட்டி வருகிறது. இதன் காரணமாக இதன் உரிமையாளர் மார்க் ஜூக்கர்பர்க் உலகின் நான்காம் மிகப்பெரிய பணக்காரராக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் நேற்று உலகெங்கும் ஒரு மணி நேரத்திற்கு மேல் முடங்கியது.இதனால், அவற்றை பயன்படுத்தும் பயனர்கள், கருத்து பரிமாற்றம், புகைப்படம் மற்றும் வீடியோ பதிவேற்றம் உள்ளிட்ட அதன் அனைத்து சேவைகளையும் பெற முடியாமல் தவித்தனர்.

Advertisement

சில மணி நேரங்கள் கடந்ததும் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு 2 செயலிகளும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன. இந்நிலையில், இன்று அமெரிக்க பங்கு சந்தையில், மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் குறைந்ததுள்ளது. இதனால் மெட்டா நிறுவன நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் ரூ.25, 000 கோடி அதாவது 3 பில்லியன் இழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.அமெரிக்கா பங்குச்சந்தையில் மெட்டா நிறுவனம் பங்குகள் சரிவை சந்தித்ததால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் பெரியளவில் சேதாரம் இல்லாமல் உலகின் நான்காம் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெருமையை மார்க் ஜூக்கர்பர்க் தக்கவைத்துக்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Tags :
Advertisement