For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

இனிதான் என்னுடைய விளையாட்டு- குஷ்பு!

07:20 PM Aug 16, 2024 IST | admin
இனிதான் என்னுடைய விளையாட்டு  குஷ்பு
Advertisement

சென்னை தியாகராய நகரில் உள்ள பாரதீய ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில், தேசிய மகளிர் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு நேற்று பங்கேற்றார்.

Advertisement

அப்போது அவரிடம், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணம் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, பதிலளித்து அவர் சொன்னது இதுதான்:–-

Advertisement

இந்தியாவில் எங்கு பெண்களுக்கு பிரச்சினை இருந்தாலும் அவற்றை தீர்த்து வைக்க வேண்டிய ஒரு மிகப்பெரிய பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பொறுப்பில் இருக்கும்போது, கட்சி சார்பாக எந்த ஒரு நிகழ்விலும் என்னால் பங்கேற்க முடியாது. இதன்காரணமாகவே, கடந்த ஒன்றரை ஆண்டுகள் கழித்து தற்போதுதான் கமலாலயம் வந்துள்ளேன். கட்சி சார்பாக உழைக்கவேண்டும், பணியாற்ற வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. என் கவனம் முழுவதும் அரசியலில்தான் உள்ளது. பாரதீய ஜனதாவுக்காக பணியாற்றுவதில்தான் எனக்கு முழு திருப்தி உள்ளது.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எனக்கு எந்த அழுத்தமும் வரவில்லை. கட்சி பதவிக்காக பேரம் பேசும் பழக்கம் எனக்கு கிடையாது.எனக்கு பேச்சு திறன் உள்ளது. பிரதமர் மோடியையும், கட்சியையும் ஆதரித்து என்னால் பேச முடியவில்லை. அதனால், மகளிர் ஆணைய உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்தேன். இனி, கட்சி சார்பாக இறங்கி வேலை பார்ப்பேன்.

நான் ராஜினாமா செய்த பிறகு தி.மு.க.வினருக்கு என் மீது பயம் வந்துவிட்டது. கட்சி சார்பில் பேச முடியாத போதே, நான் துணிந்து அவர்களை எதிர்த்து பேசியிருக்கிறேன். இப்போது நான் கட்சி சார்பில் அதைவிட அதிகமாக பேசுவேன். இனிதான் என்னுடைய விளையாட்டு ஆரம்பிக்க போகிறது. அரசியலுக்கு வந்துள்ள விஜய்க்கு அறிவுரை தேவையில்லை. நான் அரசியல் குறித்து அவரிடம் பேசியது கிடையாது. அவர் நல்ல மனிதர். அவருக்கு வாழ்த்துகள்.''என்றார்

Tags :
Advertisement