தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ஓசையில்லாமல் மனிதகுலத்தை அழித்துக் கொண்டிருக்கும் ஒலிமாசு!

08:18 PM Mar 16, 2025 IST | admin
Advertisement

விடாமல் ஒலித்துக் கொண்டே இருக்கும் பல்வேறு ஒலிகள், ஓசையில்லாமல் மனிதகுலத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. ஒலியினால் மனித உடல் நலத்திற்கு ஏற்படும் கேடுகளைப் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வேண்டும். சாலைகளில் நாட்களுக்கு நாள் அதிகரித்துவரும் சாலை வாகனங்களும், அவற்றின் மூலம் ஏற்படும் எதிர்செயல்களும் பெரும்பாலான நகரப் பகுதிகள் முழுவதும் அவதிக்குள்ளாகும். ஒலி அளவுகளை அல்லல்படுத்தக் கொண்டிருக்க வேண்டும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் காதுச் செவி திரிபு குறையும் வருவதும், கேடுகள் நிறையும் தடங்களும் தவிர்க்க முடியாத வளவுகளாகச் சந்திக்கின்றன. கடுமையான கட்டுமான வேலைகளும் அதிக ஒலியைத் தொடுத்துவிடும். இந்த இயந்திரங்களின் அதிர்வுகளால் ஏற்படும் அதிர்வலைகள் அருகிலிருப்போரை அச்சுறுத்தும் வகையில் இருக்கின்றன.

Advertisement

சாலை பயணங்களுக்கு பயன்படும் சிற்றுந்து, மகிழுந்து மற்றும் இருசக்கர வாகனங்களில் இசை என்ற பெயரில் இடியும் விட அதிக ஒலி வெளிப்படும் வகையான அமைப்பை ஏற்படுத்தி மக்களின் அதிருப்தியை ஏற்படுத்துகின்றன. பேருந்துகளில் ஹாரன் ஓசையுடனான ஒலிப்பதிவுகளும் அதிகரித்துவிட்டன. இது செய்யப்படியான ஓசையினைக் பெரும்பாலும் பொதுத்திருப்பிக்கொள்ள முடியாது.இந்த ஒலிகள் மக்கள் உடலும் அவசியத்தை வாழ்வாதாரத்தையும் பாதிக்கின்றன. மேலும் இயந்திர ஓசைகள் பள்ளிகள் மற்றும் வழிப்பாயும் தனிமைகளின் எதிர்கால மாணவர்களின் அதிகரிக்கும் மன அழுத்தத்தை சிந்திக்கத் தூண்டுகின்றன.

Advertisement

சாதாரணமாக உரக்கப் பேசுவது, அதிக சத்தத்தோடு பாட்டு கேட்பது போன்ற ஒலி மாசுக்களை பெரிய விஷயமாக நாம் எடுத்துக்கொள்வதில்லை. அதை ஒரு மாசாகவும் நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. ஒரு குழந்தை தினசரி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அழுவதை அந்த வீட்டில் உள்ளவர்கள் கவனித்தார்கள். கவனித்துப் பார்த்ததில் தினசரி அந்த நேரத்தில் அவர்கள் வாஷிங் மெஷின் போடுவது வழக்கமாக இருந்தது. அந்த சத்தம் கேட்டு குழந்தை அழுதது. இதுவும் ஒரு ஒலி மாசுதான்.

சிலருக்கு இனிமையாக இருக்கும் ஒலி, வேறு சிலருக்கு எரிச்சலாகத் தெரியும். எனவே, ஒலி அது வெளியேற்றும் உரத்தத் தன்மை, நேரம், ரிதம், தாள லயம் போன்றவை கேட்போரின் மனநிலையைப் பொறுத்து அது மாசுபடுத்துகிறதா, இல்லையா என்பதை அறிய முடிகிறது. ஒலியானது காற்றில் ஒரு அலை போன்று பரவுகிறது. ஒலியின் வலிமை டெசிபல்களால் அளக்கப்படுகிறது. ஒலியை அளக்க உதவும் கருவிக்கு சோனா மீட்டர் என்று பெயர். ஒலியின் அளவு 35 டிபி முதல் 60 டிபி வரை சாதாரணமாகத் தாங்கக்கூடியதாக இருக்கிறது. 80 டிபிக்கு மேல் உள்ளது காது கேளாமையை ஏற்படுத்தும்.140 டிபி வேதனையை தரக்கூடியது.

எதில் எல்லாம் அளவுக்கு மீறிய இரைச்சல் வருகிறதோ அது மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் காது கேளாமையை ஏற்படுத்துவதுடன் தூக்கமின்மை காரணமாக பலவித நோய்கள் தோன்ற காரணமாக அமைகிறது. ஒலி மாசு விபத்துகள், இயங்கு தசைகள் பாதிக்கப்பட்டு மூளை, கண்கள் மற்றும் தலைப்பகுதியில் உள்ள தசைகளின் விரைப்புத் தன்மை அதிகரிக்கிறது. கை, கால் விரல்கள் மற்றும் செவிகளுக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைகிறது. மூச்சு விடுதல், இதயத்துடிப்பு மற்றும் உடல் அசைவுகளில் மாற்றம் தோன்றுகிறது. மேலும் பல்வேறு காரணங்களால் சாலை விபத்துகள் நாடுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதால் பல்வேறு புள்ளி விவரங்கள் எடுத்துக் காண்பிக்கின்றன. அதன் காரணிகளில் ஒன்றாக நகர்ப்புற நிதிமுறைகளுக்கு ஒலி மற்றும் ஒலி அளவுகள் முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன.

நரம்பு மற்றும் ஹார்மோன்கள் பாதிக்கப்பட்டு பால் செயல்கள் மற்றும் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது. மனோதத்துவ ரீதியான பாதிப்பு, தலைவலி, மயக்கம், வாந்தி, எரிச்சல், கோபம், இரத்த அழுத்தம் அதிகரித்தல், இதய கோளாறுகள், சரும நிறம் மாறுதல், பெண்களுக்கு கருச்சிதைவு, அமைதியின்மை தோன்றுகிறது. பிறக்கும் குழந்தையின் பார்வை பாதிக்கப்படுதல், நமது கவனத்தை திசை திருப்பி மனநிலையை சீர்குலைத்தல், வீடு மற்றும் வன விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் மனிதர்களைப் போலவே பாதிப்புகளை உண்டாக்குகிறது என்று தெரிவிக்கிறார்கள்.திருவிழாவின் பொழுதும் பண்டிகையின் பொழுதும் என்றோ ஒரு நாள் தானே வீதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துகிறார்கள் என்று நாம் அலட்சியமாக இருந்துவிட முடியாது. 1982ம் ஆண்டு நடந்த மண்டைக்காடு கலவரம் ஒலிபெருக்கி ஒலிமாசு பிரச்சனையில் இருந்து தான் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலி பெருக்கிகளுக்கான விதிகள் மட்டும் இல்லை பொதுவாகவே ஒலி மாசு விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். 24.11.2000 அன்று கொண்டுவரப்பட்ட ஒலி மாசிற்கானச் சட்ட விதி எப்படி 21 ஆண்டுகளுக்கு பின்பு இவ்வளவு நகரமயமாக்குதலுக்குப் பின்பும் எந்த விதத் திருத்தங்களும் இல்லாமல் அப்படியே பொருந்தும்?
உலக சுகாதார நிறுவனம் வரையறை செய்துள்ள 53dB-க்கும் நாம் பாதுகாப்பான அளவுகளாக வரையறை செய்துள்ள 85dB-க்கும் 50 மடங்கு வித்தியாசம் உள்ளது.

ஒலி மாசு கண்காணிப்பைத் தீவிரப்படுத்துதல்:

தற்பொழுது இந்தியாவில் மொத்தம் 7 நகரங்களில் நகரத்திற்குத் தலா 10 இடங்கள் என்று 70 ஒலி மாசு கண்காணிப்புக் கருவிகள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. ஒலி மாசு அதிகம் ஏற்படும் நெரிசலான இடங்கள் கண்டறியப்பட்டு அனைத்து இடங்களிலும் ஒலி மாசு கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட வேண்டும். அப்பொழுது தான் வரும் காலங்களில் நகர ஒலி மாசினைப் புரிந்துகொள்ளவும் அதனைக் குறைப்பதற்கானத் தொலைநோக்கு நடவடிக்கைகளையும் நம்மால் எடுக்க முடியும்.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
noicenoice pollution
Advertisement
Next Article