For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

நோபல்:இயற்பியலுக்கான பரிசு 2 பேருக்கு அறிவிப்பு!

06:05 PM Oct 08, 2024 IST | admin
நோபல் இயற்பியலுக்கான பரிசு 2 பேருக்கு அறிவிப்பு
Advertisement

மெரிக்காவை சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஜான் ஹோப்ஃபீல்ட் மற்றும் பிரிட்டனை சேர்ந்த ஜெஃப்ரி ஹின்டன் ஆகியோருக்கு நிகழாண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து நோபல் கமிட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், செயற்கை நரம்பியல் வலையமைப்பு சார்ந்த இயந்திர கற்றலானது அறிவியல், பொறியியல் மற்றும் நமது அன்றாட வாழ்வில் புரட்சியை ஏற்படுத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது.

Advertisement

ஜான் ஜெ.ஹாஃப்ஃபீல்டு அமெரிக்காவில் உள்ள பிரிண்ட்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும் கனடாவில் உள்ள ரொரண்டோ பல்கலைக்கழகத்தில் கெஃப்ரே இ. கிளிண்டனும் பேராசிரியர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.செயற்கை அறிவியல் தொழில்நுட்பம் மூலம் மிஷின் லேர்னிங் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஹாப்ஃபீல்ட் நெட்வொர்க் வடிவங்களைச் சேமிக்க முடியும் மற்றும் அவற்றை மீண்டும் உருவாக்குவதற்கான ஒரு முறையைக் கொண்டுள்ளது. நெட்வொர்க்கிற்கு முழுமையடையாத அல்லது சற்று சிதைந்த வடிவத்தைக் கொடுக்கும்போது, ​​முறையானது மிகவும் ஒத்ததாக இருக்கும் சேமிக்கப்பட்ட வடிவத்தைக் கண்டறிய முடியும்.

Advertisement

வரும் டிசம்பர் 10-ஆம் தேதி நார்வேயின் ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், ஜான் ஹோப்ஃபீல்ட் மற்றும் ஜெஃப்ரி ஹின்டனுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஏற்கனவே மருத்துவத்துக்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ப்ரோஸ், கேரி ருவ்குன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு அடுத்தடுத்த தினங்களில் அறிவிக்கப்படுகிறது.

Tags :
Advertisement