நோபல்: 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான பரிசு!
2024-ம் ஆண்டிற்கான நோபல் பரிசை அக்-7 முதல் அறிவித்து வருகின்றனர். இந்த நோபல் அக்-14 வரையில் அறிவிக்கப்பட இருக்கிறது. அதன்படி, முன்னதாக 2024-ம் ஆண்டிற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசை அமெரிக்காவை சேர்ந்த விக்டர் ஆம்ப்ரோஸ், கேரி ருக்குன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.பின் அதைத் தொடர்ந்து நேற்றும் இதே போல இயற்பியலுக்கான நோபல் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்ஃபீல்ட், கனடாவைச் சேர்ந்த ஜியோஃப்ரி ஹிண்டன் ஆகியோருக்கு பகிர்ந்து அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று வேதியியலுக்கான நோபல் பரிசையும் அறிவித்துள்ளது நோபல் அகாடமி.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான (2024) வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதாக இன்று (09.10.2024) அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 2024ஆம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு டேவிட் பெக்கர், டெமிஸ் ஹசாபிஸ், ஜான் எம். ஜம்பர் ஆகியோர் பெற உள்ளனர். புரதம் வடிவமைப்பு, கட்டமைப்பு குறித்த ஆராய்ச்சிக்காக மூவருக்கும் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு விருதுக்கும் சுமார் 10 லட்சம் டாலர்கள் (ரூ.8.30 கோடி) பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது. நாளை இலக்கியத்துக்கான நோபல் பரிசும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அமைதிக்கான நோபல் பரிசும், அக்.14-ம் தேதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளன. நோபல் வெற்றியாளர்களுக்கு டிசம்பர் மாதம் 1ம் தேதி ஆல்ஃபிரட் நோபலின் நினைவு நாளில் பரிசுகள் வழங்கப்படும்.