நோபல்:ஜப்பானிய அமைப்பான நிஹான் ஹிடான்கியோவிற்கு அமைதிக்கான பரிசு!
உலகளவில் பெரும் மதிப்பு வாய்ந்த நோபல் பரிசு என்பது மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றிய நபர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் நினைவாக ஆண்டுதோறும் இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
முன்னரே குறிப்பிட்டது போல் சர்வதேச அளவில் அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக இந்த நோபல் பரிசு பார்க்கப்படுகிறது. அந்த வகையில், 2024 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பற்றிய அறிவிப்புகள் கடந்த நில நாட்களாக வெளியிடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், இலக்கியம், வேதியியல் உள்ளிட்ட பிரிவுகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு, ஈரானிய ஆர்வலர் நர்கஸ் முகமதிக்கு "ஈரானில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான அவரது போராட்டம் மற்றும் மனித உரிமைகள் மற்றும் அனைவருக்கும் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கான அவரது போராட்டத்திற்காக" அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட நிலையில் இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ(Nihon Hidankyo) என்ற அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு அணு ஆயுதங்கள் இல்லாத உலகை அடைய முயற்சிகளை மேற்கொண்டு வருவதற்காக இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஹிரோஷிமா(Hiroshima) மற்றும் நாகசாகி(Nagasaki) ஆகிய நகரங்களில் அணுகுண்டுகளால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை மேம்படுத்துவதற்காகவும், நகரங்களை மறுசீரமைப்பு செய்வதற்காகவும் பல்வேறு முயற்சிகளை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது.அதாவது ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் இருந்து அணுகுண்டில் இருந்து தப்பியவர்களின் அடிமட்ட இயக்கம் இது ஆகும்.இந்த அமைப்பு ஹிபாகுஷா என்றும் அழைக்கப்படும். அணு ஆயுதங்கள் இல்லாத உலகத்தை அடைவதற்கான அதன் முயற்சிகளுக்காகவும், அணு ஆயுதங்களை மீண்டும் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என்பதை உரத்த குரலில் சொல்லும் அமைப்பாகும் .மேலும் இந்த அமைப்பு, உலக நாடுகள் அணு ஆயுதங்களை பயன்படுத்த கூடாது என்ற நிலைபாட்டை கொண்டுள்ளது. அணு ஆயுதமில்லா உலகை உருவாக்க வேண்டும் என்பதே இந்த அமைப்பின் நோக்கம் ஆகும். எனவே இந்த நிறுவனத்தில் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.