தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பாஜக தயவுடன் மீண்டும் பீகார் முதல்வரானார் நிதிஷ்குமார்!

07:04 PM Jan 28, 2024 IST | admin
Advertisement

காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் வைத்திருந்த கூட்டணி உறவை முறித்துக் கொண்டு வெளியேறி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், இன்றே மாலையில் பாஜக ஆதாரவுடன் 9-வது முறையாக பீகார் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் ராஜேந்திர அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.பீகார் கவர்னர் மாளிகையில் நடந்த பதவி ஏற்பு விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, ஜிதன் ராம் மஞ்சி, சிராக் பாஸ்வான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிதிஷ் குமார் பதவி ஏற்ற போது பாஜக தொண்டர்கள் ஜெய் ஸ்ரீராம் என்றும் பாரத் மாதாகி ஜே என்றும் முழக்கமிட்டனர். நிதிஷ் குமாருடன் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

Advertisement

முன்னதாக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இதில், கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராக மாநில தலைவர் சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக விஜய் குமார் சின்ஹா தேர்வு செய்யப்பட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாம்ராட் சவுத்ரி, "என் வாழ்வில் வரலாற்றுத் தருணத்தை பாஜக ஏற்படுத்தி இருக்கிறது. கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும், அரசில் பங்கு வகிக்க இருப்பதும் மிகுந்த உணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2020ல் நடைபெற்ற பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பு என்பது மாநிலத்தின் வளர்ச்சிக்கானது. லாலு யாதவின் பயங்கரவாதத்துக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிஹாரில் காட்டாட்சி இருக்ககூடாது. அதற்கு முடிவு கட்ட வேண்டும் என முதல்வர் நிதிஷ் குமார் முன்மொழிந்ததை அடுத்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது" என கூறினார். இதனையடுத்துப் பேசிய கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவராக இருந்து தற்போது துணைத் தலைவராக மாறி இருக்கும் விஜய் குமார் சின்ஹா, கட்சியின் மூத்த தலைவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

Advertisement

இந்நிலையில், இன்று மதியம் 1 மணி அளவில் மீண்டும் கவர்னரை நிதிஷ் குமார் சந்தித்தார். அவருடன், சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா உள்ளிட்ட பாஜக தலைவர்கள், ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா தலைவர்கள், ஒரு சுயேட்சை எம்எல்ஏ ஆகியோரும் சென்று கவர்னரைச் சந்தித்தனர். அப்போது, பாஜக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட ஆதரவு எம்எல்ஏக்களின் கையொப்பம் அடங்கிய மனுவை ஆளுநரிடம் அளித்து, தனக்கு பெரும்பான்மை இருப்பதால் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு உரிமை கோரியிருந்தார். .அந்த மனுவில் தனக்கு 128 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும் நிதிஷ்குமார் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இன்று காலையில் ராஜினாமா செய்த நிதிஷ்குமார், மாலை பாஜக ஆதரவுடன் மீண்டும் பீகார் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் எட்டு பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர், இதில் மூன்று பேர் பாஜக அமைச்சர்கள் ஆவர். இதோடு துணை முதல்வராக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா கலந்துக் கொண்டார். கடந்த 23 ஆண்டுகளில் ஒன்பதாவது முறையாக நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் இந்த பல்டி பாலிடிக்ஸ் குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "முன்பு நாங்களும் அவரும் ஒன்றாக இணைந்து போராடினோம். நான் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வியுடன் பேசும் போது அவர்கள் நிதிஷ் குமார் வெளியேறுகிறார் என்று தெரிவித்தனர். அவர் விரும்பினால் இருக்கலாம் ஆனால் அவர் வெளியே செல்லவே விரும்புகிறார். இது எங்களுக்கு முன்பே தெரியும். ஆனால் இண்டியா கூட்டணியைக் காப்பாற்றுவதற்காக ஏதாவது கூறினால், அது தவறான தகவலாக போய்விடும். இந்த நாட்டில் ராமன் வந்தார் சென்றார் என்பது போல் பலர் உள்ளனர் என்று லாலு மற்றும் தேஜஸ்வி முன்பு சொன்னது இப்போது உண்மையாகியுள்ளது" என்று கருத்துச் சொன்னாராக்கும்

Tags :
againBiharBjpchief ministerNitish Kumar
Advertisement
Next Article