‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ - விமர்சனம்!
சமீப கால இளம் தலைமுறையினர் தங்களை 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் என வகைப்படுத்திக் கொள்வதைப் பார்த்திருப்பீர்கள். ஜெனரேஷன் வகையில் இப்படி தனித்தனி பெயரிட்டு அழைப்பதும் வழக்கத்தில் உள்ளது. அதன்படி, 1946 - 1964 காலக்கட்டத்தில் பிறந்தவர்கள் ‘பேபி பூமர்ஸ்’ (Baby boomers), 1965 - 1980 காலக்கட்டத்தில் பிறந்தவர்கள் ‘ஜெனரேஷன் எக்ஸ்’ (Gen X), 1997 - 2012 காலக்கட்டத்தில் பிறந்தவர்கள் ‘ஜெனரேஷன் இஸட்’ (Gen Z) என்று அழைக்கப்படுவர். சூழலும் தாக்கமும் நம் குழந்தைப் பருவத்தில் பெரும் தாக்கத்தைத் தரக்கூடியவை நாம் வாழும் சூழல். சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஒப்பிடப்படுவது, 90ஸ் கிட்ஸ் Vs 2கே கிட்ஸ்தான். இந்த இரு தரப்பின் வாழ்க்கைச் சூழலில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. நைன்ட்டீஸ் கிட்ஸ்களுக்கு கேபிள் டிவி என்று கூட சொல்லத் தெரியாது. அவர்கள் சன் டிவி என்பார்கள். ஆனால், 2கே கிட்ஸ்களுக்கு ஸ்மார்ட்ஃபோனில் ஓடிடி பார்க்கும் வசதி கிடைத்திருக்கிறது. தொழில்நுட்ப ரீதியில் மிகப் பெரிய பாய்ச்சல் இந்த இரு பத்தாண்டுகளில்தான் அதிகம் ஏற்பட்டது. இச்சூழலில் இளவயது பருவ காதலை மையமாக வைத்து உருவாகி இருப்பதே இப்படம். மாடர்ன் பையங்கள் என்பற்காக இக்காதலில் உயிர் இருக்காது என்று நினைக்க வேண்டாம். இக்கால பையன் மூலம் வழக்கமான 90ஸ் கிட்ஸூன் ஈர்ப்பு காதல் கதை ஒன்றை கோலிவுட் & டோலிவுட்டுக்கு உரிய மசாலா தடவி வழங்கி இருக்கிறார் டைரக்டர் தனுஷ்.
அதாவது மிடில் கிளாஸ் ஃபேமிலியைச் சேர்ந்த ஹீரோ பவிஷ் நாராயணன் கோடீஸ்வரன் மகள் அனிகாவை லவ்வுகிறார். அனிகாவும் லவ்வி தன் காதலன் பவிஷை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அப்பா சரத்குமாரிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். ஆனால் சரத்குமாருக்கு பவிஷை கொஞ்சமும் பிடிக்கவில்லை. மகளுக்காக சில நாட்கள் தன்னுடன் பவிஷ் பழக வேண்டும் எனாறும் அதன் பிறகு அவன் உனக்கு ஏற்றவனாக இருப்பானா என்பதை கூறுவதாக சரத் கண்டிஷன் போடுகிறார். அதை ஏற்று பவிஷ் சரத் உடன் பழகுகிறார். ஒரு கட்டத்தில் அனிகாவை வெறுப்பது போல் பவிஷ் ஒதுங்கிச் சென்று விடுகிறார்.காரணம் புரியாமல் மனம் நொந்து போன அனிகா தன் அப்பா கைகாட்டிய மாப்பிள்ளை மணக்க சம்மதிக்கிறார். மேலும் தனது திருமண பத்திரிக்கையை பவிஷுக்கு அனுப்பி வைக்கிறார். அந்த திருமணத்தில் பவிஷூம் பங்கேற்க வருகிறார். அதன் பிறகு நடப்பதை கோலிவுட்டுக்கு தேவையானக் காட்சிகளுடன் சொல்லி இருப்பதே இப்படக் கதை.
ஹீரோவாக தனுஷின் அக்கா பையன் பவிஷிற்கு இது முதல் படம் என்பதை அவரது கண்களே காட்டிக்கொடுத்து விடுகிறது. பார்ப்பதற்கும் பேசுவதற்கும் அச்சு அசல் அந்தக் கால தனுஷ் போல இருக்கிறாரே அன்றி, நடிப்பில் அவரது மாமாவின் சாயல் துளி கூட தென்படவில்லை. பல இடங்களில் அவர் டைலாக் பேசுவது போல தெரியவில்லை, எழுதிக்கொடுத்திருப்பதை கொஞ்சம் உணர்ச்சிகளை கலந்து ஒப்பிப்பது போல இருக்கிறது. நாயகி அனிகா சுரேந்திரன், மழலை முகமாக இருந்தாலும், இறுதிக் காட்சியில் காதலுக்காக உருகி, ஏங்கும் இடங்களில் அசத்தலாக நடித்திருக்கிறார். நாயகனின் நண்பராக நடித்திருக்கும் மேத்யூ தாமஸ், வரும் காட்சிகள் அனைத்தும் சிரிக்க வைக்கிறது. வெங்கடேஷ் மேனன் மற்றும் ராபியா கதூன் கவனிக்க வைக்கிறார்கள். சித்தார்தா ஷங்கர், ரம்யா ரங்கநாதன், பிரியா வாரியர், ஆர்.சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், உதய் மகேஷ், ஸ்ரீதேவி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் நீட்.
மியூசிக் டைரக்டர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரையில் பார்க்கும் போது பரவசப்படுத்தி துள்ளல் போட வைக்கிறது. பின்னணி இசை படவோட்டத்திற்கு தேவையான உயிர் ஊட்டி மெருகேற்றியுள்ளது.
கதை ஒன்றும் புதிது இல்லை என்று சொல்லிவிடக் கூடாது என்பதற்காகவே வழக்கமான காதல் கதை என்று தொடக்கத்திலேயே சொல்லி விடும் உத்தி எடுபடுகிறது. அதே சமயம் டீன் ஏஜ் காதலின் ஆழம் அழுத்தம் ஆனந்தம் எல்லாவற்றையும் செல்வராகவன் ஸ்டைலில் விரும்புப்படி சொல்லி டைரக்டராக ஸ்கோர் செய்து விட்டார் தனுஷ்
மொத்தத்தில் - 2கே மூவி
மார்க் 3.25/5