For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

முகநூலில் செய்திகள்:ஆஸ்திரேலியாவின் கெடுபிடியால் வெளியாவதை நிறுத்தும் மெட்டா.!

07:45 PM Mar 01, 2024 IST | admin
முகநூலில் செய்திகள் ஆஸ்திரேலியாவின் கெடுபிடியால் வெளியாவதை நிறுத்தும் மெட்டா
Advertisement

டகங்களில் வெளியாகும் செய்திகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் முகநூல், கூகுள் நிறுவனங்கள் வெளியிட்டால் அதற்குரிய கட்டணத்தை ஊடக நிறுவனங்களுக்கு செலுத்த வழி வகை செய்யும் வகையில் ஆஸ்திரேலியா சட்டம் கொண்டுவந்து விட்டது. இதன் மூலம், கூகுள் மற்றும் முகநூல் போன்ற நிறுவனங்களின் 6 பில்லியன் டொலர் விளம்பர வருவாய், செய்தி நிறுவனங்களுக்குச் செல்ல நேரிடும். இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முகநூல் நிறுவனம், அவுஸ்திரேலியாவில் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் செய்திகள் பகிரும் வசதியையே நிறுத்தி விட்டதாக அறிவித்துள்ளது.

Advertisement

இணைய நிறுவனங்கள் உரிம ஒப்பந்தங்களை பெறுவது கட்டாயம் என ஆஸ்திரேலிய அரசு விதிகளை வகுத்திருப்பதால் ஆஸ்திரேலியாவுக்கும், மெட்டாவுக்கும் இடையே புதிய பிரச்சினைக்கு வழிகோலியுள்ளது. மேலும், கடந்த 2021-ல் ஆஸ்திரேலிய அரசு கொண்டு வந்த சட்டம், மெட்டா போன்ற சமூக வலை தொழில்நுட்ப நிறுவனங்கள், செய்தி இணைப்புகளுக்கு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் மத்தியஸ்தரை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என தெரிவிக்கிறது. முகநூலில் செய்தி, கட்டுரைகளுக்கான இணைப்புகள் தோன்றும் போது ஃபேஸ்புக், கூகுள் ஆகியவை நியாயமற்ற முறையில் பயனடைகின்றன என சில செய்தி வெளியீட்டாளர்கள் தெரிவித்தனர். ஆஸ்திரேலிய அரசும் இதை ஆமோதித்தது.

Advertisement

இந்நிலையில், இணைய நெரிசலை தவிர்ப்பதற்காக செய்தி, அரசியல் பதிவுகளை ஊக்குவிப்பதை மெட்டா குறைத்து வருவதாகவும், இப்போது தோன்றும் செய்தி இணைப்புகள், பயனர்களின் பின்னூட்டங்களின் ஒரு பகுதியே எனவும் மெட்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா நாடுகளில் செய்திகளை ஊக்குவிக்கும் பிரிவு (டேக்), ஃபேஸ்புக்கில் நீக்கப்படும் என மெட்டா அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனியில் ஆகிய நாடுகளில் இந்த வசதி நீக்கப்பட்டதாக மெட்டா தெரிவித்துள்ளது. மேற்கண்ட நாடுகளில் பாரம்பரிய செய்தி பதிவுகளுக்கான புதிய வணிக ஒப்பந்தங்களில் நாங்கள் ஈடுபடமாட்டோம். மேலும், செய்தி வெளியீட்டாளர்களுக்கு முகநூல் புதிய செயல்பாடுகளை வழங்காது என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய அரசின் 2021 சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே, மெட்டா தற்போது ஆஸ்திரேலியாவில் தனது வலைதளப் பக்கத்தில் செய்திகள் என்ற பிரிவை நீக்குவதாக அறிவித்துள்ளது. மெட்டாவின் இந்த நடவடிக்கை காரணமாக, ஊடகங்களின் வணிக நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடக நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

2023-ம் ஆண்டில் கனடாவிலும் இதேபோன்ற ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement